Search
  • Follow NativePlanet
Share
» »லீவுக்கு கேரளா டூர் போறீங்களா? இந்த ரயில்களில் புக் செய்தால் ஈஸியா டிக்கெட் கிடைக்கும்

லீவுக்கு கேரளா டூர் போறீங்களா? இந்த ரயில்களில் புக் செய்தால் ஈஸியா டிக்கெட் கிடைக்கும்

கோடை வெயில் வெளுத்து வாங்க துவங்கி விட்டது. குழந்தைகளுக்கு லீவ் வேற விட்டாச்சு. இந்த சமயத்தில் குளுகுளு என எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்று தான் அனைவரும் திட்டமிடுவார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சமீப காலமாக தேர்வு செய்யும் இடமாக இருப்பது கேரளா தான். சமீப ஆண்டுகளாக பலரும் கேரளாவிற்கு படையெடுக்க துவங்கி விட்டனர்.

Train

ஆன்மிக தலங்கள், சாகசங்கள், சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள், படகு சவாரி, பீச்சுகள், டிரெக்கிங், சாகசங்கள், நீர்வீழ்ச்சிகள் என அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையான பல இடங்கள் இங்கு உள்ளன. அதனால் குழந்தை, பெரியவர்கள், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையிலான பல இடங்கள் இங்கு உள்ளன.

கோடை விடுமுறைகள், ரம்ஜான் பண்டிகை, நவராத்திரி என வரிசையாக விடுமுறைகள் வருவதால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க சில குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. கூட்ட நெரிசலை சரி செய்வதற்காக இது முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளா செல்லும் சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் மார்ச் 29ம் தேதி முதல் சேர்க்கப்பட உள்ளன. இதனால் நீங்களும் சம்மர் லீவுக்கு கேரளா செல்ல திட்டமிட்டிருந்தால் இந்த ரயில்களில் டிக்கெட் புக் செய்யுங்கள் நிச்சயம் கிடைக்கும்.

கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள ரயில்கள் விபரம்

1. ரயில் எண் 12076 திருவனந்தபுரம் சென்ட்ரல் - கோழிக்கோடு ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்காலிகமாக மார்ச் 29ம் தேதி முதல் கூடுதலாக சேர் கார் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

2. ரயில் எண் 12075 கோழிக்கோடு - திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜன்சதாப்தி எக்ஸ்பிரசில் கூடுதலாக சேர் கார் பெட்டிகள் மார்ச் 29 முதல் இணைக்கப்பட உள்ளது.

3. ரயில் எண் 16603 மங்களூரு சென்ட்ரல் - திருவந்தபுரம் சென்ட்ரல் மாவேலி எக்ஸ்பிரஸில் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் மார்ச் 27 மற்றும் 28 நாட்களில் இணைக்கப்பட உள்ளது.

4. ரயில் எண் 16604 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல்க ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டி மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் இணைக்கபட உள்ளது.

5. ரயில் எண் 16629 திருவனந்தபுரம் சென்ட்ரல்- மங்களூரு சென்ட்ரல் மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் இணைக்கப்பட உள்ளது.

6. ரயில் எண் 16630 மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஸ்லீப்பர் கிளாஸ் கோச் மார்ச் 27, 28 மற்றும் 31, ஏப்ரல் 01 ஆகிய தேதிகளில் இணைக்கப்பட உள்ளது.

7. ரயில் எண்16343 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இணைக்கப்பட உள்ளது.

8. ரயில் எண் 16344 மதுரை ரயில் நிலையம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயிலில் கூடுதலா ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் கோச் மார்ச் 29 மற்றும் 30 தேதிகளில் இணைக்கப்பட உள்ளது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+