Search
  • Follow NativePlanet
Share
» »கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஒட்டி சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் – தென்னக ரயில்வே அறிவிப்பு!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஒட்டி சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் – தென்னக ரயில்வே அறிவிப்பு!

கிருஸ்துமஸ் பண்டிகையின் போது அதிகரித்து வரும் பயண தேவையை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. தென்மேற்கு ரயில்வே கேஎஸ்ஆர் பெங்களூரு மற்றும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. இந்த ரயில்களின் விவரங்கள், அவற்றின் அட்டவணைகள் மற்றும் கோச் கலவைகள் பின்வருமாறு!

கிருஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள்

2024ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அதிகரிக்கும் பயண தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கிறிஸ்மஸ் பண்டிகைக்காக பல்வேறு ரயில்வே மண்டலங்களில் 149 சிறப்பு ரயில் பயணங்களுடன் சேர்த்து மாநிலத்திற்கு 10 சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சபரிமலை யாத்ரீகர்கள் சுமூகமாக பயணிக்க 416 சிறப்பு ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

Indian Railways

பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள்

பொது மக்களின் வசதிக்காக அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், அஷ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பதிலளிக்கக்கூடிய நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இந்த சிறப்பு ரயில் சேவைகளுக்கு ஒப்புதல் அளித்தார். கிறிஸ்மஸ் மற்றும் சபரிமலை யாத்திரையின் போது பொதுமக்களுக்கு சிறந்த பயண வாய்ப்புகளை கோரி மத்திய சிறுபான்மையினர் மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த பின்னர் இந்த சேவைகள் அனுமதிக்கப்பட்டன.

2024 கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள்

· தென் மேற்கு ரயில்வே (SWR): 17 பயணங்கள்

· மத்திய ரயில்வே (CR): 48 பயணங்கள்

· வடக்கு இரயில்வே (NR): 22 பயணங்கள்

· தென்கிழக்கு மத்திய இரயில்வே (SECR): 2 பயணங்கள்

· மேற்கு ரயில்வே (WR): 56 பயணங்கள்

· மேற்கு மத்திய ரயில்வே (WCR): 4 பயணங்கள்

· சபரிமலை யாத்திரைக்கு சிறப்பு ரயில்கள்:

· தென் மேற்கு ரயில்வே (SWR): 42 பயணங்கள்

· தெற்கு ரயில்வே (SR): 138 பயணங்கள்

· தென் மத்திய ரயில்வே (SCR): 192 பயணங்கள்

· கிழக்கு கடற்கரை இரயில்வே (ECOR): 44 பயணங்கள்

Indian Railways

மாநிலத்திற்கான சிறப்பு ரயில்கள்

· ரயில் எண்.06039/06040 தாம்பரம்-கன்னியாகுமரி-தாம்பரம் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்

· ரயில் எண்.06043/06044 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-கொச்சுவேலி-டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்

· ரயில் எண்.06037/06038 கொச்சுவேலி-மங்களூர் வாராந்திர முன்பதிவு இல்லாத அந்த்யோதயா சிறப்பு ரயில்

· ரயில் எண்.06021/06022 கொச்சுவேலி-கயா-கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில்

· ரயில் எண்.06007/06008 கொச்சுவேலி-பனாரஸ்-கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில்

சென்னை to பெங்களூரு சிறப்பு ரயில்கள்

ரயில் எண். 07319: கேஎஸ்ஆர் பெங்களூரு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில். 08:05 மணிக்கு KSR பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த ரயில், அதே நாளில் 14:30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை அடைகிறது. அதே போல, ரயில் எண். 07320: டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு சிறப்பு ரயில், 15:55 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் 22:50 மணிக்கு KSR பெங்களூரு சென்றடைகிறது. இந்த ரயில் சேவை டிசம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில் சேவைகளின் நேரங்கள் மற்றும் நிறுத்தங்கள்

· நிலைய ரயில் எண். 07319 புறப்படும் ரயில் எண். 07320 வருகை

· கேஎஸ்ஆர் பெங்களூரு 08:05 மணி 22:50 மணி

· யஷ்வந்த்பூர் 08:18/08:20 மணி 22:33/22:35 மணி

· கிருஷ்ணராஜபுரம் 08:55/08:57 மணி 21:45/21:47 மணி

· பங்காரப்பேட்டை 09:33/09:35 மணி 20:43/20:45 மணி

· ஜோலார்பேட்டை 11:03/11:05 மணி 19:38/19:40 மணி

· காட்பாடி 12:08/12:10 மணி 18:28/18:30 மணி

· அரக்கோணம் 12:53/12:55 மணி 17:33/17:35 மணி

· பெரம்பூர் 13:40/13:42 மணி 16:43/16:45 மணி

· டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் 14:30 மணி 15:55 மணி

More News

    Read more about: chennai southern railway
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+