Search
  • Follow NativePlanet
Share
» »மட்டன் பிரியாணி முதல் கறி தோசை வரை - சென்னை மெரினா கடற்கரையில் உணவு திருவிழா!

மட்டன் பிரியாணி முதல் கறி தோசை வரை - சென்னை மெரினா கடற்கரையில் உணவு திருவிழா!

சென்னை மெரினா கடற்கரையில் நாவை சுண்டியிழுக்கும் சுவையான மற்றும் வண்ணமயமான உணவு திருவிழா இன்று முதல் துவங்கவுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, தினமும் மதியம் 12:30 மணி முதல் செயல்படும். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் பல்வேறு சத்தான மற்றும் பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்படும். கொங்கு மட்டன் பிரியாணி துவங்கி, மதுரை கறி தோசை வரை இங்கு நீங்கள் தமிழகத்தின் பல்வேறு உணவுகளை ருசிக்கலாம்!

Food Festival

ஒரே இடத்தில் 100 க்கும் மேற்பட்ட உணவுகள்

சுவையான மற்றும் வித்தியாசமான 100 க்கும் மேற்பட்ட உணவுகள் ஒரே இடத்தில் கிடைத்தால் அதை நாம் மிஸ் பண்ணலாமா? உணவுகள் மட்டுமின்றி ஒவ்வொரு ஊரின் பெயரை சொல்லும் இனிப்புகளும், கார வகைகளும் இடம்பெறவுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா சென்னை, மெரினா கடற்கரையில் நாளை தொடங்கி டிசம்பர் 24 வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. உணவு மட்டுமல்லாமல் பல்வேறு சுய உதவிக் குழுக்கள் தயாரித்த கைவினைப் பொருட்களும் விற்பனைக்கு இடம்பெறுகின்றன.

Food Festival

சுத்தமான மற்றும் பாரம்பரிய உணவுகள்

உணவுத் தரச் சான்றிதழ் (FSSAI) பெற்ற 24 குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையிலும், கலப்படம் ஏதுமின்றியும் தயாரித்து, தகுந்த முறையில் கட்டுமானம் (Packaging) செய்து விற்பனை செய்திட 6 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. துவக்க நாளான 20.12.2024 அன்று மட்டும் மாலை 04.00 மணி முதல் இரவு 08.30 மணி நடைபெறும் உணவுத் திருவிழா. 21.12.2024 முதல் 24.12.2024 வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைபெறும்.

Food Festival
Food Festival

என்னென்ன உணவுகளை நாம் இங்கே சுவைக்கலாம்

1. சென்னை தயிர் பூரி

2. கோவை கொங்கு மட்டன் பிரியாணி

3. ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி

4. மயிலாடுதுறை இறால் வடை

5. வேலூர் ராகி கொழுக்கட்டை

6. காஞ்சிபுரம் கோவில் இட்லி

7. தருமபுரி ரவா கஜூர்

8. நாகப்பட்டிணம் மசாலா பணியாரம்

9. நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன்

10. திருப்பூர் முட்டை ஊத்தாப்பம்

11. கரூர் தோல் ரொட்டி

12. மதுரை கறி தோசை

13. தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு

14. கன்னியாகுமரி பழம் பொறி

15. நீலகிரி ராகி களி

16. சிவகங்கை மட்டன் உப்புக்கறி

17. விருதுநகர் கரண்டி ஆம்லெட்

18. புதுக்கோட்டை சுக்குமல்லி காபி

19. திருச்சி நவதானிய புட்டு

20. அரியலூர் வறுத்த முந்திரி

21. செங்கல்பட்டு நாட்டுச்சர்க்கரை எள்ளுருண்டை

22. சென்னை வேர்க்கடலை நெய் லட்டு

23. கருப்பு கவுனி அரிசி லட்டு

24. கோவை பீட்ரூட் மால்ட் பொடி

25. கடலூர் சங்குப்பூ சர்பத்

26. தருமபுரி குதிரைவாலி ரோஸ் லட்டு

27. திண்டுக்கல் காராபூந்தி

28. ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா

29. காஞ்சிபுரம் முட்டை மிட்டாய்

30. சேலம் ஆட்டையாம்பட்டி முறுக்கு

31. கரூர் பாசிப்பருப்பு உருண்டை

32. கிருஷ்ணகிரி மசாலா தட்டுவடை

33. மதுரை தொத்தல்

34. நாகப்பட்டிணம் சுண்டைக்காய் வத்தல்

35. நீலகிரி ஸ்ட்ராபெர்ரி ப்ளூபெர்ரி

36. ராமநாதபுரம் லோத்தல்

37. தென்காசி தேன் நெல்லி

38. திருநெல்வேலி அல்வா

39. தூத்துக்குடி உடன்குடி கருப்பட்டி

40. திருச்சி மணப்பாறை முறுக்கு

அனுமதி இலவசம், அனைவரும் வருக

லேடி வெலிங்டன் கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் குயின் மேரிஸ் கல்லூரி உள்ளிட்ட நியமிக்கப்பட்ட கல்லூரி வளாகங்களில் இலவச வாகன நிறுத்தம் உள்ளது. உணவு திருவிழாவிற்கு நுழைவு இலவசம், பல்வேறு சமையல் அனுவங்களையும் அனுபவிக்க அனைவரையும் அழைக்கிறது. இந்த உணவுகள் அனைத்துமே, உடனடியாக சமைத்து வழங்கப்படும்!

More News

    Read more about: chennai news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+