ஓர்ச்சாவின் மிக அழகிய பூங்காவான ஃபூல் பாக் ஒரு காலத்தில் ஓர்ச்சாவை ஆண்ட பந்தேலா ஆட்சியாளர்களின் மேன்மையின் சான்றாக நிமிர்ந்து நிற்கும் ஒரு கட்டிடக்கலை அற்புதமாகும். இந்த பூங்கா கண்ணை வருடும் அதன் அழகினால் இப்பகுதியில் ஆண்ட ராஜாக்களின் கோடை வாசஸ்தலமாக இருந்துள்ளது.
இந்த பாக், ஓர்ச்சா இளவரசரான தின்மான் ஹர்டாலின் நினைவாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா வளாகம் நீரோட்டத்தை அதிகரிக்கக்கூடியதான வளமான அமைப்புடன் காணப்படுகிறது.
இது சந்தன் கடோரா நீரூற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான பூங்காவில் இடம்பெற்றிருக்கும் பத்கீர் சவான் பாடோன் கோபுரங்கள் இதற்கு குளிர்ச்சியை வழங்கும் நோக்கிலேயே கட்டப்பட்டுள்ளன.
ஃபூல் பாக்கில் உள்ள சோலை இதனை ஒத்த சாயலில் இருக்கும் மொகாலய பாணியையே பின்பற்றுகிறது. இதனால் ஃபூல் பாக் கண்கவர் இயற்கை அழகுடன் திகழ்கிறது.



Click it and Unblock the Notifications