அழகிய நகரமான ஓர்ச்சாவில் அமைந்துள்ள ராணி மஹாலில் இருந்து பார்த்தால் முழு நகரமும், பெட்வா ஆறும் தெள்ளெனத் தெரிவதனால் இது ஒரு பிரபல காட்சி முனையாகத் திகழ்கிறது. அற்புதமாகக் கட்டப்பட்டுள்ள ராணி மஹால், போற்றத்தக்க கட்டுமானக் கலையின் மற்றொரு சான்றாக விளங்கும் நவீன கட்டிடமாகும்.
ராணி மஹால் அதன் சுவர்களில் காணப்படும் சித்திரங்களுக்கு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இது மன்னர் மதுகர் ஷாவினுடைய பேகத்தின் வசிப்பிடமாக இருந்ததனால் இது ராணியின் அறை என்று வழங்கப்படுகிறது.
இந்த ராணி, ராமபிரானின் தீவிர பக்தையாக விளங்கினார். அதனால், இராமாயணத்தின் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ள அரிய பல சித்திரங்களை இங்கு காணலாம். புதுமையான கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் இதர சித்திரங்கள் இந்த மஹாலின் அழகுக்கு மேலும் அழகூட்டுகின்றன.
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உட்புறம் மற்றும் வெளிப்புறங்களைக் கொண்டுள்ள ஓர்ச்சாவின் ராணி மஹால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் ஒரு இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications