பச்மாரி வருடத்தின் எந்தப் பகுதியிலும் செல்லக் கூடிய ஒரு ஸ்தலமாகும். ஆனாலும் கூட, அக்டோபர் முதல் ஜூன் வரையில் நிலவக்கூடியதான குளிர்காலமே இங்கு செல்வதற்கான மிகச் சிறந்த காலமாகக் கூறப்படுகிறது. வருடத்தின் இந்தப் பகுதியில் மிகவும் சாதகமான வானிலை நிலவுகின்றது. மேலும், இச்சமயத்தில் இங்கு தசரா மற்றும் நவராத்திரி போன்ற விழாக்கள் மிகவும் குதூகலமாகவும், கேளிக்கை நிறைந்ததாகவும் விமரிசையான முறையில் கொண்டாடப்படுகின்றன.
பச்மாரியில் கோடைகாலம் மிகவும் ரம்மியமாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸாக இருக்கும். கோடைகாலம் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து ஜூன் மாதம் வரை நீடிக்கின்றது. கோடைகாலத்தின் போது இங்கு அதிக வெப்பம் இருக்காது; அதனால் இதமாகப் பரவும் சூரிய ஒளியில் பச்மாரியை மிக நன்றாக ரசிக்கலாம்.
பச்மாரியில் மழைக்காலம் ஜூலை முதல் செப்டம்பர் வரை நீடிக்கின்றது. இக்காலத்தின் போது பச்மாரியில் மிதமான மழைப்பொழிவு இருக்கும். இங்கு ஏராளமான அருவிகள் இருப்பதினால், அருவிகளில் நீர் நிறைந்து எழிலுற காட்சியளிக்கும் காலமான மழைக்காலத்தின் போது பச்மாரி செல்வது சிறப்பானதாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
குளிர்காலம் தோராயமாக நவம்பர் மாதத்தில் ஆரம்பித்து பிப்ரவரி மாதத்தில் முடிவடைகிறது. குளிர்காலத்தின் போது, வெப்பநிலை சுமார் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்படும். குளிர்காலம் மிகக் குளிருடன் இருக்கும். குளிர்காலத்தின் போது பச்மாரியில் தங்கள் விடுமுறையைக் கழிக்கச் செல்லும் பயணிகள் மறக்காமல் கம்பளி உடைகளை கையோடு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.