பஹல்கம் கிராமத்தின் வெப்பநிலை கோடை காலங்களில் சீரானதாக இருப்பதால் அந்த காலமே சுற்றிப் பார்ப்பதற்கு சிறந்த காலமாக கருதப்படுகிறது. அதோடு பனிச் சிகரங்களை பார்க்க விரும்பும் பயணிகளும், குளிரை தாக்குப்பிடிப்பவர்களும் பனிக் காலங்களில் பஹல்கம் வரலாம்.
(மார்ச் முதல் ஜூன் வரை) : பஹல்கம் கிராமத்தின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சமாக 22 டிகிரியும், குறைந்தபட்சமாக 12 டிகிரியுமாக இருக்கும்.
(ஜூலை முதல் அக்டோபர் வரை) : பஹல்கம் கிராமத்தின் மழைக் காலங்களில் ஈரப்பதம் சற்று அதிகமாக காணப்படும். அதோடு இந்தக் காலங்களில் பெரும்பாலான பயணிகள் பஹல்கம் கிராமத்துக்கு சுற்றுலா வர விரும்புவதில்லை.
(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : பஹல்கம் கிராமத்தின் பனிக் காலங்களில் வெப்பநிலை பூஜ்யத்துக்கும் கீழே சென்று விடுவதோடு முழு கிராமும் பனிபடர்ந்து காணப்படும். எனவே பனிச் சிகரங்களை பார்க்க விரும்பும் பயணிகளும், குளிரை தாக்குப்பிடிப்பவர்களும் மட்டும் பஹல்கம் வரலாம்.