Search
  • Follow NativePlanet
Share

பஹல்கம் - பூமியின் மீது சொர்க்கத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு!

51

பஹல்கம் என்ற குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இந்த கிராமம் அதன் வரலாற்றுச் சுவடுகளை வரலாற்று இடைக்காலத்தில் தேடினால், நிச்சயம் அதற்கென ஒரு இடம் இருக்கும். முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் இது ஒரு சின்ன ஆட்டிடையர் கிராமமாக இருந்தது. இங்குள்ள உணவு, ஆடைகள் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வு முறையை வைத்தே இதனுடைய வளமையான பண்பாட்டை நாம் அறிந்துக் கொள்ளலாம். ஹிந்தி மொழியை தவிர உருது, காஷ்மீரி மற்றும் ஆங்கிலமும் இந்த வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இவ்விடம் கடல் மட்டத்திலிருந்து 2740 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 95 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த இடம் ஏராளமான அடர்ந்த காடுகள், பளிங்கு போன்ற தெளிவான ஓடைகள் மற்றும் படர்ந்திருக்கும் புல்தரையில் மலர்ந்திருக்கும் பூக்களை கொண்டவைகளாக உள்ளன. இந்த இடத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இங்கே தான் அரு மற்றும் சேஷ்நாக் ஆகிய இரண்டு நதிகள் சங்கமமாகிறது.

பஹல்கம் கிராமத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சேஷ்நாக் நதி இமயமலையின் மேல் பனி ஆறாக போய்ச் சேரும். அரு நதி கொலஹோய் என்ற பனிக்கட்டி ஆற்றில் வந்து கலக்கும். ஹிந்துக்களின் புனித பயணமான அமர்நாத் யாத்திரையை பஹல்கமை கடந்து தான் செல்ல வேண்டும். பஹல்கமிலிருந்து இந்த யாத்திரையை முடிக்க மூன்று நாட்கள் தேவைப்படும்.

பஹல்கமை அடித்தளமாக கொண்டு சுற்றுலாப் பயணிகள் இங்கிருந்து சண்டிவர், அரு பள்ளத்தாக்கு மற்றும் கொஹ்லி பனிக்கட்டி ஆறு ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். ஜீப் பயணமும் இங்கு சுற்றாலாப் பயணிகளுக்கு தரப்படுகிறது. பஹல்கமில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மட்டன், டர்சர் ஏரி, ஷிகர்காஹ், சூரியக் கோவில், ஆயிஷ்முகம், லிட்டர்வாட் மற்றும் மாமலேஷ்வர் கோவில் ஆகியவைகள் மிக முக்கியமானவை.

பஹல்கமிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பைசரண் என்ற இடத்தை கண்டிப்பாக ரசித்தாக வேண்டும். அடர்ந்த காடுகள், படர்ந்திருக்கும் புல்தரைகள் மற்றும் பனி மூடிய மலைகள் போன்றவைகளைக் கொண்ட அழகு துள்ளியோடும் இடம். பஹல்கமிலிருந்து 16 கி.மீ. தூரத்தில், கடல் மட்டத்தின் மேல் 3353 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏரியின் பெயர் டுலியன். இதுவும் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலம். இந்த இடங்களை சுற்றிப் பார்க்க ஒரு குதிரையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதன் மீது சவாரி செய்தபடியே உலா வரலாம்.

பஹல்கமின் சுற்றுப்புறத்தில் மற்றொரு பிரபலமான சுற்றுலாத் தலமான சந்தன்வாரி, கடல் மட்டத்தின் மேல் 2923 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் அங்குள்ள ஒரு அழகான பனிப் பாலத்திற்கு பெயர் போனது. இந்த பாலத்தை பார்ப்பதற்கு ஒரு எழிலோவியத்தை போல் காட்சி அளிக்கும். பஹல்கமிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள இன்னொரு முக்கியமான சுற்றுலாத் தலம் தான் பஞ்ச்டர்னி. ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் தான் அமர்நாத் யாத்திரை முடிவு பெறுகிறது.

பஹல்கம் ஒரு புகழ் பெற்ற முகாம் திடலாகவும் விளங்குகிறது. மேலும் இது அமர்னாத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது. இது போக இதன் சுற்று வட்டாரத்தில் தான் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பரமுல்லா மாநகராட்சியிலுள்ள ஹஜன் என்ற பிரபல தலமும் உள்ளது.

பஹல்கமின் எழில் கொஞ்சும் இயற்கை அழகிற்காகவே இங்கே பல பாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பஹல்கமில் தங்கள் விடுமுறையை செலவிட விரும்புபவர்கள், வருடத்தில் எல்லா காலமும் இங்கே வரலாம்.

பஹல்கமின் வானிலை

இந்த இடத்தின் வானிலை எப்பொழுதுமே இனிமையாக இருக்கும். மிதுவான தட்ப வெப்ப நிலையுடன் அருமையாக இருக்கும் வானிலையை ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை அனுபவிக்கலாம். பனிமழையை காண விரும்புபவர்கள் பஹல்கமுக்கு நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை வரலாம். ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை அமர்நாத் செல்லும் பல பக்தர்களின் கூட்டத்தை இங்கே காணக்கூடும். இருப்பினும் ஏப்ரல் மாதம் மத்தியிலிருந்து நவம்பர் மத்தியில் வரை பஹல்கம் சென்று வர மிகவும் உகந்த நேரம்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் கைவினைப் பொருட்களான கம்பளங்கள், சால்வைகள் மற்றும் பாரம்பரிய ஆடைகளை வாங்கிச் செல்லலாம்.

பஹல்கமை அடைவது எப்படி?

பஹல்கம் அனைத்து முக்கிய நகரங்களுடன் விமானம், ரயில் மற்றும் தரை வழி தொடர்பில் உள்ளாதால் இங்கு சென்று வருவது சுலபமே.

பஹல்கம் சிறப்பு

பஹல்கம் வானிலை

சிறந்த காலநிலை பஹல்கம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பஹல்கம்

  • சாலை வழியாக
    பஹல்கம் கிராமத்திலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீநகரும், 828 கிலோமீட்டர் தூரத்தில் டெல்லியும் அமையப்பெற்றிருக்கின்றன. மேலும் ஸ்ரீநகரிலிருந்து எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பஹல்கம் கிராமத்துக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பஹல்கம் கிராமத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீநகர் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீநகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்த பின் டேக்ஸி அல்லது பேருந்து மூலமாக எளிதில் பஹல்கம் கிராமத்தை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பஹல்கம் கிராமத்திலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீநகர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லி விமான நிலையத்துக்கு தினமும் நிறைய விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதோடு டெல்லி விமான நிலையம் நாட்டின் மற்ற நகரங்களுடனும், வெளிநாட்டு நகரங்களுடனும் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat