Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாலம்பூர் » வானிலை

பாலம்பூர் வானிலை

பாலம்பூர் பகுதியின் வெப்பநிலை எப்போதும் இனிமையாக காணப்படுவதால் எக்காலத்தில் வேண்டுமானாலும் பாலம்பூருக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம். இருப்பினும் குளிர்காலத்தில் வெப்பநிலை 0° C க்கும் கீழே சரியக்கூடும் என்பதால் அச்சமயத்தில் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. புத்த பௌர்ணிமா போன்ற முக்கியமான பண்டிகைகள் மே மாதத்திலும், ஹோலி பண்டிகை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திலும், துசேரா அக்டோபர் மாதத்திலும் இப்பகுதியில் கொண்டாடப்படுகின்றன. பெரும்பாலான பயணிகள் திருவிழாக்காலங்களில் பாலம்பூருக்கு சுற்றுலா மேற்கொள்வதையே விரும்புகின்றனர்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): பாலம்பூர் பகுதியில் ஏப்ரல் மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 15° C முதல் 29°C வெப்பநிலை நிலவுகிறது. எனவே பாலம்பூர் சுற்றுலாஸ்தலத்துக்கு விஜயம் செய்ய கோடைக்காலம் மிகவும் ஏற்றதாக உள்ளது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): பாலம்பூர் பகுதியில் ஜுலை மாதத்தில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீள்கிறது. மழைக்காலத்தில் நல்ல மழைப்பொழிவை பெறுவதால் பசுமையான எழிற்சூழல் நிறைந்து காட்சியளிக்கும் இப்பருவம் சுற்றுலாவுக்கு உகந்ததாகும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): பாலம்பூர் பகுதியில் நவம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்ச குளிராக -2° C வரை குறைந்து காணப்படலாம். குளிர்காலம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.