Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாரதீப் » வானிலை

பாரதீப் வானிலை

பாரதீப்பிற்கு சுற்றுலா செல்ல நவம்பர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட பருவமே மிகவும் சிறந்தது. இந்த மாதங்களில் பாரதீப்பின்  வானிலை மிகவும் குளிர்ந்து மற்றும் இதமாக காணப்படுவதால் இந்தப் பருவத்தில் பாரதீப்பிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். எனினும் இந்தப் பருவத்தில் இரவு நேரங்களில் அதிக குளிர் நிலவுவதால் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்களுடன் கம்பளி ஆடைகளை உடன் எடுத்துச் செல்வது நல்லது.

கோடைகாலம்

மார்ச் மாதத்தில் கோடைகாலம் தொடங்கியவுடன் பாரதீப் மிகவும் சூடாகிவிடுகின்றது. புழுக்கமான வெப்பமான வானிலையை  தாங்கமுடியாமல் காற்றின் ஈரப்பதமும் சோதனை செய்கின்றது. இங்கு  கோடைகாலம் மே மாதத்துடன்  முடிவடைகிறது. இந்த பருவத்தில் பாரதீப்பின் அதிக பட்ச  வெப்பநிலை சுமார் 41 டிகிரி செல்யியஸ் ஆகும். எனவே சுற்றுலா பயணிகள் கோடை காலத்தில் பாரதீப்பிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைக்காலம்

பாரதீப் பருவமழை காலத்தில் அதிக அளவு  மழைப்பொழிவை  பெறுகிறது. இங்கு பருவமழை மே மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை தொடர்கிறது. அக்டோபரில் ஆங்காங்கே மழை பொழிகின்றது. பாரதீப் ஆண்டுதோறும் சராசரியாக 1480 மிமீ மழைப் பொழிவை பெறுகிறது.

குளிர்காலம்

அக்டோபர் மாதத்தின் இறுதியில் பாரதீப் குளிர்காலத்தின் பிடியில் சிக்குகின்றது. நவம்பர் மாதத்தின் இறுதி வரை  வானிலை இனிமையாக உள்ளது. அதன் பிறகு இங்கு அதிக குளிர் தொடங்கி விடுகின்றது.  ஒரிசாவின்  மற்ற பகுதிகளை போன்றே இந்த நகரமும் குளிர் அலைகளை அனுபவவிக்கின்றது. குளிர்காலத்தில் இரவு நேர வெப்பநிலை சுமார் 9 டிகிரி செல்ஸியஸிற்கும் கீழே சென்று விடுகின்றது. இங்கு குளிர்காலம் மார்ச் மாத  தொடக்கம் வரை நீடிக்கிறது.