Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பர்பானி » வானிலை

பர்பானி வானிலை

பொதுவாக பர்பானி சுற்றுலாத்தலம் மிதமான பருவநிலையை வருடமுழுவதும் கொண்டிருக்கிறது. எனவே இந்த சுற்றுலாத்தலத்திற்கு எல்லாக்காலத்திலும் பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் மழைக்காலமும் குளிர்காலமும்  ஊர் சுற்றி பார்க்கவும் இயற்கையை ரசிக்கவும் மிகவும் ஏற்றதாக உள்ளன.

கோடைகாலம்

பர்பானி பகுதியில் கோடைக்காலம் மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கின்றது. இக்காலத்தில் 25°C  முதல் 40°C  வரையிலும் வெப்பநிலை காணப்படுகிறது. குறிப்பாக மே மாதத்தில் உஷ்ணம் அதிகமாக உள்ளது. இருப்பினும் மற்ற பிரதேசங்களோடு ஒப்பிடும்போது பர்பானி பகுதியில் கோடைக்கால வெப்பம் சகித்துக்கொள்ளும்படியாகவே உள்ளதால் பயணத்துக்கு இடைஞ்சலில்லை என்று சொல்லலாம்.

மழைக்காலம்

பர்பானி பகுதி மழைக்காலத்தில் கணிசமான  மழைப்பொழிவைப் பெறுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையில் மேற்குத்தொடர்ச்சி பருவக்காற்றின் மூலமாக நல்ல மழையை, குறிப்பாக ஜுலை ஆகஸ்ட் மாதத்தில், இப்பகுதி பெறுகிறது. மழைக்கு பிந்தைய காலமான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் சிறுசிறு மழைத்தூறல் காணப்படுகிறது. மிக அற்புதமான பருவநிலை இக்காலத்தில் நிலவுவதால் இக்காலத்தில் பர்பானிக்கு விஜயம் செய்வது சிறந்தது.

குளிர்காலம்

பர்பானி பகுதியில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் நிலவுகிறது இக்காலத்தில் வெப்பநிலை  15°C முதல்    30°C  வரையிலும் காணப்படுகிறது. டிசம்பர் மாதமானது வருடத்திலேயே அதிகக் குளுமையுடன் விஜயம் செய்ய வசதியாக உள்ளது.