Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பர்வனூ » வானிலை

பர்வனூ வானிலை

இந்த அழகிய நகரத்தை காண சிறந்த காலமாக கோடைகாலம் உள்ளது. ஏனெனில், இக்காலத்தில் வானிலை இதமானதாகவும், சுகமானதாகவும் இருக்கிறது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): பர்வனூவில் கோடைகாலம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நீடிக்கிறது. இந்தப் பருவத்தில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருக்கும் போது, குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாக உள்ளது. மே மாதம் தவிர கோடை முழுவதும் இதமான காலநிலை உள்ளது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை): பர்வனூவில் பருவமழை ஜூன் தொடங்கி, செப்டம்பர் வரை தொடர்கிறது. இப்பகுதியில் மழைக்காலத்தில் பலத்த மழை பெய்கின்ற போது, வெப்பநிலை இருபதுகளில் இருக்கும். மழைக்கு பின்னர் இவ்விடம் மிகவும் இதமானதாக இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): பர்வனூவில் குளிர்காலம் நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கிறது. இப்பகுதியில் இந்த நேரத்தில் மிகவும் குளிர் நிரம்பியதாக -8° டிகிரிக்கும் கீழே உள்ளது. இந்த நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 8 டிகிரியைத் தாண்டாது. குளிர்காலத்தில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள், மிகக்குளிரான மாதங்களாக இருக்கின்றன.