Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பட்டியாலா » வானிலை

பட்டியாலா வானிலை

அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலங்களே பட்டியாலா சுற்றுலா வருவதற்கு சிறந்த காலங்கள். இக்காலத்தில் இங்கே குளிர்ந்த தென்றலும் இனிமையான வானிலையும் நிலவும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன்): பட்டியாலாவில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைகாலம் ஜூன் வரை நீடிக்கும். மே மாதத்தில் தான் இங்கு அதிகப்படியான வெப்பம் நிலவும். இக்காலத்தில் அதிகபட்ச தட்ப வெப்பநிலை 43° செல்சியசாகவும் குறைந்தபட்ச தட்ப வெப்பநிலை 30° செல்சியசாகவும் பதிவாகும். கோடைகாலத்தில் வெப்பம் கடுமையாக இருப்பதால் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவது நல்லதல்ல.

மழைக்காலம்

(ஜூலை முதல் அக்டோபர்): பட்டியாலாவில் ஜூலை மாதம் தொடங்கும் மழைக்காலம் அக்டோபர் வரை நீடிக்கும். இக்காலத்தில் இங்கு கனமழை பெய்வதால் சுற்றுலாவிற்கு வருபவர்கள் குடை அல்லது மழையில் நனையாமல் இருக்க அதற்கேற்ப ஆடைகள் எடுத்து வருவது நல்லது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி): பட்டியாலாவில் அக்டோபர் மாதம் தொடங்கும் குளிர் காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இக்காலத்தில் அதிகபட்ச தட்ப வெப்பநிலை 25° செல்சியசாகவும் குறைந்தபட்ச தட்ப வெப்பநிலை 5° செல்சியசாகவும் நிலவும். இந்நேரத்தில் வானிலை இனிமையாகவும் கொண்டாடும் வகையிலும் இருக்கும்.