நாகாலாந்தின் மக்களுக்கு மிகவும் முக்கியமான இடமாக புயில்வா கிராமத்தின் குகைகள் உள்ளன. அவை நாகா மக்களின் இதயங்களுடன் நெருங்கிய தொடர்பிலுள்ளவையாகும்.
பெரன் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள இந்த குகைகளில் தான், பிரிட்டிஷாரை எதிர்த்து போரிட்ட புரட்சியாளாரான இராணி கைய்டின்லியூ மறைந்து வாழ்ந்தார்.
இந்த சம்பவத்திலிருந்து இந்த குகைகள் நாகாலந்து மக்களுக்கு மிகவும் முக்கியமான இடமாக மாறி விட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு A Z பிஸோ இந்த குகைகளில் மறைந்திருந்துதான் நாகா மக்களின் அடையாளத்திற்காக போராடி வந்தார்.
உங்களுக்கு சாகசம் செய்ய வேண்டும் என்ற ஆர்வமிருந்தால் இந்த கிராமத்தையொட்டி தொடர்ச்சியாக உள்ள குகைகளை சுற்றிப் பார்ப்பதில் உங்கள் நேரத்தை நீங்கள் செலவிடலாம். இந்த குகைகளை ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் சுற்றிப் பார்த்திடும் வேளைகளில், அதன் இயற்கையழகு உங்களை மிகவும் கவர்ந்து விடும்.
மிகவும் அன்பான புயில்வா கிராம மக்களை கொண்டிருக்கும் இந்த பகுதிக்கு நீங்கள் வரும் போது அதன் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை அவர்களிடமிருந்து உங்களால் அறிந்திடவும் முடியும்



Click it and Unblock the Notifications