இன்டாக்கி பூங்கா என்றும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ன்டாங்கி தேசிய பூங்கா, மாவட்ட தலைநகரம் 40 கிமீ தொலைவிலும் மற்றும் திமாபூர் நகரத்திலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது.
சுமார் 200 ச.கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை பிரிட்டிஷ் நிர்வாகத்தினர் 1923-ம் ஆண்டு உருவாக்கினார்கள். வட கிழக்கு இந்தியாவின் மிகச்சிறந்த தேசிய பூங்காக்களில் ஒன்றாக இருக்கும் ன்டாங்கி தேசிய பூங்கா, அடர்ந்த மழைக்காடுகளை கொண்டிருப்பதால் அது பல்வேறு பறவைகள், ஊர்வன உயிரினங்கள் மற்றும் பாலூட்டிகளின் இருப்பிடமாக இந்த பூங்கா உள்ளது.
மலைகள், மலை முகடுகள் மற்றும் அடர்ந்த காடுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த பூங்கா முகாமிடுவதற்கும் மற்றும் சாகசம் செய்வதற்கும் மிகவும் ஏற்ற இடமாக உள்ளது.
இந்த தேசிய பூங்காவில் நீங்கள் காணும் காட்டெருமைகள் (மிதுன்) மற்றும் ஹுலுக் கிப்பன்கள் ஆகியவற்றை நாகலாந்தில் மட்டும் தான் காண முடியும்.
இவை மட்டுமல்லாமல், புலிகள், காட்டு நாய்கள், தேவாங்கு கரடிகள் மற்றும் பறக்கும் அணில்கள் ஆகியவற்றையும் இந்த பூங்காவில் காண முடிவதால் இந்த பூங்கா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.
கறைபடாத இயற்கை அழகுடன் விரிந்திருக்கும் இந்த பூங்கா காண்பவரின் கண்களுக்கு அழகை மெருகேற்றி காட்டுகிறது.



Click it and Unblock the Notifications