Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெக் » வானிலை

பெக் வானிலை

கோடை காலமே பெக்கிற்கு சுற்றுலா செல்ல சிறந்த பருவமாகும். இங்கு மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களுக்கு மிதமான காலநிலை நிலவும். இந்த இனிமையான காலநிலை பெக்கை சுற்றியுள்ள கிராமப்புறங்கள் மற்றும் இயற்கை மறைவிடங்களை ஆழ்ந்து அனுபவிப்பதற்கு  உகந்ததாக  இருக்கிறது.

கோடைகாலம்

பெக்கின் கோடை காலம் மார்ச்சில் தொடங்கி மே வரை நீடிக்கிறது. கோடைகாலத்தில் பெக்கின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 31 டிகிரி செல்சியஸ் மற்றும் 16 டிகிரி செல்சியஸ் ஆகும். கோடையில் மிதமான காலநிலை நிலவுவதால் பெக்கை சுற்றிப்பார்க்க இதுவே சிறந்த பருவம் ஆகும். இங்கு மே மாத இறுதியில் லேசான மழை பெ

மழைக்காலம்

பெக் ஒரு நீண்ட கால பருவமழையை பெறுகிறது. இங்கு ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கும் பருவமழை அக்டோபர் மாதம் வரை தொடர்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் கன மழை பொழிவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவு பாதிக்கப்பட்டுகின்றது. எனவே இந்த பருவத்தில் பெக்கிற்கு சுற்றுலா செல்வது மிகக் கடினமாகும்.  எனவே சுற்றுலா பயணிகள் இந்த பருவத்தை தவிற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குளிர்காலம்

பெக்கின் குளிர்காலம் மிகக் குளிரானது. எனவே, இது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சில கம்பளி ஆடைகளை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விடுகிறது. இங்கு டிசம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலங்களில் வெப்ப நிலை 10 டிகிரி செல்ஸியஸிற்கும் கீழே சென்று விடுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, இந்த பகுதியில் கடுங் குளிர் நிலவும்.