Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிலானி » வானிலை

பிலானி வானிலை

ராஜஸ்தானின் சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து தப்புவதற்கு பனிக் காலங்களான டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் பிலானி நகருக்கு சுற்றுலா வருவதுதான் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : பிலானி நகரம் தார் பாலைவனத்தில் அமைந்திருப்பதால் கோடை காலங்களில் கடுமையான வெப்பம் நிலவும். இந்தக் காலங்களில் பிலானி நகர வெப்பநிலை அதிகபட்சமாக 52 டிகிரியை கூட எட்டும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : பிலானி நகரின் மழைக் காலங்களில் ஒரு சில மில்லி மீட்டர் அளவில்தான் மழைப்பொழிவு இருக்கும். இதன் காரணமாக இந்த நகரம் பல ஆண்டுகளாக வறட்சி மிகுந்த மழைக் காலத்தையே சந்தித்து வருகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : பிலானி நகரின் பனிக் காலங்களில் சில சமயம் பூஜ்யத்துக்கும் கீழே கூட வெப்பநிலை செல்லும்.