இந்திய வரலாற்றில் மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாக கருதப்படும் பூதான் இயக்கம் துவங்கிய இடமாக வினோபா மந்திர் சரித்திரங்களின் பக்கங்களில் முக்கிய இடம் வகிக்கிறது.
வினோபா மந்திர் என்பது உண்மையில் வினோபா பாவேவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் ஆஸ்ரமமே ஆகும். ஆனால் இதன் சமய முக்கியத்துவம் காரணமாக இது கோயிலாக கருதப்படுகிறது.
இந்தக் கோயிலின் உள்ளே வினோபா பாவேவுக்கும், பூதான் இயக்கத்திற்காக முதலில் தயாள மனதுடன் 250 ஏக்ரா நிலம் வழங்கியவரான ராமச்சந்திர ரெட்டிக்கும் சிலைகள் உள்ளன.
அதோடு இங்கு வினோபா பாவேவின் வாழ்க்கை குறிப்புகள் பயணிகள் தெரிந்துகொள்ளும் விதமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பூதன் இயக்கத்தின் சின்னமாக கோயிலுக்கு வெளியே பூதான் ஸ்தூபம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications