பொன்முடி சிகரத்தின் வடக்கு திசை நோக்கி நீங்கள் டிரெக்கிங் சென்றால் சிறிது நேரத்திலேயே அற்புதமான மிருகக் காட்சி சாலை ஒன்றை அடைவீர்கள். மினி ஜு என்று ஆங்கிலத்தில் பிரபலமாக அழைக்கப்படும் இந்த மிருகக்காட்சி சாலையில் காணப்படும் பாரசிங்கா என்ற சதுப்பு நில மான் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தம். இதுதவிர இங்கு நீங்கள் ஏராளமான அரிய விலங்கினங்களை கண்டு ரசிக்கலாம்.
மினி ஜு பகுதிக்கு வரும் பயணிகள் மிருகங்களை பார்த்து ரசிப்பதோடு புகைப்படம் எடுப்பது, ஹைக்கிங் மற்றும் டிரெக்கிங் செல்வது என்று அவரவர்களுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
மேலும் இந்த மிருகக்காட்சி சாலை குழந்தைகள், இளைஞர்கள், தம்பதிகள், காட்டுயிர் பிரியர்கள் என்று அனைவருக்குமான மிகச் சிறந்த பொழுதுபோக்கு தலமாக திகழ்ந்து வருகிறது.



Click it and Unblock the Notifications