Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பூம்புகார் » வானிலை

பூம்புகார் வானிலை

டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் குளிர்காலமே பூம்புகார் நகரத்தை சுற்றிப்பார்த்து ரசிக்க  ஏற்றதாக உள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்காது என்பதால் வரலாற்று ஞாபகங்களை அசை போட்டபடி நிதானமாக இந்த பகுதியை சுற்றிப்பார்க்க இப்பருவமே மிகவும் உகந்தது.

கோடைகாலம்

 பூம்புகார் நகரத்தில் கோடைக்காலத்தில் அதிக வெப்பம் மற்றும் நிலவுகிறது. இக்காலத்தில் பகல் நேர வெப்பநிலை 34°C முதல்  40°C வரை காணப்படும். எனவே இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பகலில் அசௌகரிமான சூழல் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மழைக்காலம்

மழைக்காலத்தில் பூம்புகார் நகரம் நல்ல மழைப்பொழிவை பெறுவதால் வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்படும். தென்மேற்குப்பருவ மழையைவிட வடகிழக்கு பருவமழைக்காலத்தில் அதாவது அக்டோபர் மாதத்தில் பூம்புகார் பகுதி அதிக மழைப்பொழிவை பெறுகிறது. மேலும், புயல் மையம் கொள்ளும் பிரதேசத்தில் இந்த கடற்கரை நகரம் அமைந்திருப்பதால் கடும் மழைப்பொழிவு இருக்கும் காலங்களில் இங்கு விஜயம் செய்வதை தவிர்ப்பதும் நல்லது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் பூம்புகார் நகரம் ரசிக்கக்கூடிய இதமான சூழலுடன் காட்சியளிக்கின்றது.   இக்காலத்தில் 24°C முதல்  32°C வரையான வெப்பநிலையுடன் இப்பகுதி காட்சியளிக்கிறது. டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு குளிர்காலம் நீடிக்கிறது. இதுவே சுற்றுலாவுக்கேற்ற பருவமாகவும் அறியப்படுகிறது.