Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» பிரபாஸ் கிரி

பிரபாஸ் கிரி - ஜைன சமய புண்ணியத் தலம்!

5

பிரபாஸ் கிரி என்ற ஒரு அழகிய சுற்றுலாத் தலம், உத்திரப்பிரதேசத்தில் உள்ள கௌசாம்பி மாவட்டத்தில் அலகாபாத் நகரத்துக்கு 60 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. ஜெயின் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிரபாஸ் கிரி ஒரு முக்கிய புண்ணியத் தலமாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் இந்த பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஜெயின் இன மக்களின் மிக முக்கிய புண்ணியத் தலமான பகவான் பத்ம பிரபு ஆலயம் பிரபாஸ் கிரியில் அமைந்திருக்கிறது. ஜெயின் சமயத்தின் 6-வது தீர்த்தங்கரரான பகவான் பத்ம பிரபுவின் நினைவாக, இந்த ஆலயத்திற்கு அவருடைய பெயரே சூட்டப்பட்டிருக்கிறது.

மேலும் இந்து சமய மக்களுக்கும் பிரபாஸ் கிரி ஒரு புண்ணியத் தலமாக விளங்குகிறது. அதாவது பகவான் கிருஷ்ணர் பூமியில் தனது இறுதி வாழ்நாட்களை பிரபாஸ் கிரியில் செலவழித்ததாக சொல்லப்படுகிறது.

பிரபாஸ் கிரியில் ஏராளமான குகைகளைப் பார்க்கலாம். இந்த குகைகளின் சுவர்களில் பழமையான பிராமி இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன. எனவே இந்த சுவர்கள் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன.

பிரபாஸ் கிரிக்கு வந்தால், அதன் அருகில் இருக்கும் காரா மற்றும் மன்ஜன்பூர் பகுதிகளுக்கும் சென்று வரலாம். காராவில் பல பிரபலமான இந்து சமய ஆலயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவையாக ஷீட்ல மாதா கோயில், சத்ரபால் பைரவ் கோயில், அனுமான் கோயில் மற்றும் காளீஸ்வர் மகாதேவ் ஆலயம் போன்றவை விளங்குகின்றன.

ஷீட்ல மாதா கோயில் கங்கை நதிக் கரையில் அமைந்திருக்கிறது. ஷீட்ல மாதாவிற்கு இருக்கும் 51 சக்திபீத்திகளில் மிக முக்கியமான சக்திபீத்தியாக இந்த கோயில் அழைக்கப்படுகிறது. மன்ஜன்பூரில் இருக்கும் காமாசின் தேவி ஆலயம் இந்த நகரத்திற்கு ஏராளமான பக்தர்களை அழைத்து வருகிறது.

பிரபாஸ் கிரி சிறப்பு

பிரபாஸ் கிரி வானிலை

சிறந்த காலநிலை பிரபாஸ் கிரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பிரபாஸ் கிரி

  • சாலை வழியாக
    உத்திரப்பிரதேச அரசு பிரபாஸ் கிரிக்கு நேரடியாகவே பல பேருந்துகளை இயக்கி வருகின்றன. குறிப்பாக சோம்நாத் மற்றும் வாரானாசி போன்ற நகர்களிலிருந்து பிரபாஸ் கிரிக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பிரபாஸ் கிரிக்கு 40 கிமீ தொலைவில் உள்ள பார்வாரியில் ஒரு தொடர்வண்டி நிலையம் அமைந்திருக்கிறது. இந்த தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள் மூலமோ அல்லது வாடகை டாக்ஸிகள் மூலமோ பிரபாஸ் கிரியை சென்று அடையலாம். அதோடு அலகாபாத் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸிகள் மூலமாகவும் பிரபாஸ் கிரியை அடைய முடியும். மும்பை, வாரனாசி, ஜான்ஸி, குவாலியர் மற்றும் நாக்பூர் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து அலகாபாத் தொடர்வண்டி நிலையத்திற்கு ஏராளமான தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பிரபாஸ்கிரிக்கு 48 கிமீ தொலைவில், அலகாபாத்தில் உள்ள பாம்ரவ்லி விமான நிலையம் அமைந்திருக்கிறது. அந்த விமான நிலையத்தில் இறங்கி அரசுப் பேருந்துகள் மூலமோ அல்லது வாடகை டாக்ஸிகள் மூலமோ பிரபாஸ் கிரிக்கு மிக எளிதாகச் சென்று வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed