ப்ரச்சி பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா வருவதற்கு குளிர் காலமே சிறந்த காலமாக விளங்கும். இக்காலத்தில் பகல் நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதோடு, இரவு நேரத்தில் இன்னும் அதிகமாக குளிர்ந்த காற்று வீசும். ஆங்காங்கே மக்கள் நெருப்பின் முன் குளிர் காய்வதை சுற்றுலாப் பயணிகள் காண நேரிடலாம். இந்நேரத்தில் வானிலை இனிமையாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பலர் இங்கே படையெடுத்து வருவதுண்டு.
இங்கே கோடைக்காலம் வெறும் மூன்று மாதத்திற்கு மட்டுமே நீடிக்கும். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் கோடைக்காலத்தில் தட்ப வெப்பநிலை 40° செல்சியஸ் வரை செல்லும். கோடைக்காலத்தில் இங்கே தொடர்ச்சியாக அனல் காற்று வீசுவதால் வியர்த்து கொட்டுவதுடன் டீஹைட்ரேஷன் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால் சுற்றுலாவிற்கு இது உகந்த காலம் கிடையாது.
பொதுவாக மழைக்காலம் இங்கே நீண்ட நாட்களுக்கு நீடித்து நிலைக்கும். ஜூன் மாதம் தொடங்கும் பருவக்காலம் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். இந்நேரத்தில் இடைவேளை இல்லாமல் தொடர்ச்சியாக கனமழை பெய்யக்கூடும். அதனால் இதுவும் சுற்றுலாவிற்கு உகந்த காலம் கிடையாது.
ப்ரச்சி பள்ளத்தாக்கில் குளிர் காலமும் குறைந்த காலத்திற்கே, அதாவது வெறும் மூன்று மாதத்திற்கே நீடிக்கும். டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிலவும் குளிர் காலத்தில் தட்ப வெப்பநிலை 10° செல்சியசுக்கு கீழிறங்கும். அதிகபட்ச தட்ப வெப்பநிலை 27° செல்சியசை தாண்டுவதில்லை. இக்காலமே சுற்றுலாவிற்கு உகந்த காலமாக விளங்கும். இந்நேரத்தில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெதுவெதுப்பான ஆடைகளை எடுத்து வருவது நல்லது.