ப்ரச்சி பள்ளத்தாக்கு - பண்பாடும் தொல்பொருளியலும் சங்கமிக்கும் இடம்!

ப்ரச்சி பள்ளத்தாக்கு புபனேஷ்வரில் இருந்து 61 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கே தொல்லியல் சார்ந்த இடங்கள் வளமையாக இருப்பதால் தொல்பொருளியல் மற்றும் வரலாற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் மத்தியில் இது புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

மகாநதி ஆற்றின் மூன்றாம் நிலை நதியான ப்ரச்சி நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. கி.பி.7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.15-ஆம் நூற்றாண்டு வரையிலான நினைவுச் சின்னங்கள் பலவற்றை இங்கே காணலாம்.

ப்ரச்சி மற்றும் லலிதா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் சஹடா என்ற அழகிய இடம் ஒன்று உள்ளது. நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் கங்காவை விஷ்ணு பகவான் தலை முழுகச் சொன்னதாக புராணக்கதைகள் கூறுகிறது. லலிதா மாதவா என்ற இடத்தில் விஷ்ணு பகவானின் உருவத்தை இங்கே காணலாம்.

ப்ரச்சி பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களுடன் தொடர்புடைய பழமையான கோவில்கள் பலவற்றை கொண்டுள்ளது ப்ரச்சி பள்ளத்தாக்கு. சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் அம்ரேஷ்வரா கோவில் ராமாயணத்தோடு உறுதியான தொடர்பை கொண்டுள்ளது.

இது போக சோபனேஸ்வர கோவில், பித் கோவில், சமுதா தேவி கோவில் மற்றும் கிராமேஸ்வர கோவில் போன்ற பழமையான கோவில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளது. ப்ரச்சி, சரஸ்வதி மற்றும் மணிகர்ணிகா நதிகள் சங்கமிக்கும் இடத்தை மணிகர்ணிகா தீர்த் என்று அழைப்பார்கள்.

இந்த இடத்திற்கு அருகில் தான் இந்த பழமையான கோவில்கள் அனைத்தும் உள்ளன. அமாவசையின் போது மணிகர்ணிகா தீர்த்தத்தில் புனித நீராட இங்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

பல கடவுள்களுக்காக பல கோவில்கள் இங்கு உள்ளதால் பல வகையான பண்பாடுகள் இங்கே பின்பற்ற வந்துள்ளது. இது ப்ரச்சி சுற்றுலாவிற்கு கூடுதல் பெருமையை சேர்க்கும் விதமாக உள்ளது.

ப்ரச்சி பள்ளத்தாக்கிற்கு பயணம்

ப்ரச்சி பள்ளத்தாக்கை அடைவதற்கு இரயில் அல்லது விமானம் மூலம் முதலில் புவனேஷ்வரை அடைய வேண்டும். அங்கிருந்து டாக்சி அல்லது பேருந்து மூலமாக ப்ரச்சி பள்ளத்தாக்கை வந்தடையலாம். குளிர் காலத்தில் வானிலை இனிமையாக இருப்பதால் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதே உகந்த நேரமாக இருக்கும்.

Please Wait while comments are loading...