Search
  • Follow NativePlanet
Share
»
»தாம்பரம்-நாகர்கோவில் உட்பட 10 ரயில் சேவைகள் நீட்டிப்பு - தென் மாவட்ட பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்!

தாம்பரம்-நாகர்கோவில் உட்பட 10 ரயில் சேவைகள் நீட்டிப்பு - தென் மாவட்ட பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்!

தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் திருநெல்வேலி-சென்னை உட்பட 10 சிறப்பு ரயில்களின் சேவை காலத்தை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவை அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, இவற்றின் சேவை காலம் நீட்டிப்பு செய்யப்படுகின்றன. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்!

சமீபத்தில் தெற்கு ரயில்வேக்கு செய்யப்பட்ட பரிந்துரை

பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக, குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் முழுவதும் உள்ள இடங்களுக்கு பல சிறப்பு ரயில் சேவைகளை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதை கருத்தில் கொண்டு, 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க தெற்கு ரயில்வேயின் போக்குவரத்து பிரிவு பரிந்துரை செய்யப்பட்டது!

Indian Railways

சிறப்பு ரயில் சேவையால் பலனடைந்த மக்கள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க தெற்கு ரயில்வேயிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது, சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு வழித்தடங்களில் 50 க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் பெரிதும் பலனடைந்தனர்.

10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை நீட்டிக்க பரிந்துரை

டிசம்பர், ஜனவரி மாதங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு கிடைக்கும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிடுவார்கள். எனவே இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். இதை கருத்தில் கொண்டு, 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க தெற்கு ரயில்வேயின் போக்குவரத்து பிரிவு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே 10 ரயில்களின் சேவையை நீட்டித்துள்ளது.

Indian Railways

நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள் என்னென்ன

  • நாகர்கோவில்-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலின் (எண்: 06012) 10 சேவைகள் டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளன.
  • மறுமார்க்கமாக, தாம்பரம்-நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் (06011) 10 சேவைகள் டிசம்பர் 2 முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளன.
  • திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயிலின் (06070) 10 சேவைகள் டிசம்பர் 5 முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளன.
  • மறுமார்க்கமாக, எழும்பூர் - திருநெல்வேலிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் (06069) 10 சேவைகள் டிசம்பர் 6 முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளன.
  • இதேபோல, தாம்பரம்-ராமநாதபுரம் வாரம் இருமுறை சிறப்பு ரயில் (06103), ராமநாதபுரம்-தாம்பரம் வாரம் இருமுறை சிறப்பு ரயில் (06104) உட்பட 6 சிறப்பு ரயில்களின் சேவைக் காலத்தை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+