Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ராய்கர் கோட்டை

ராய்கர் கோட்டை –  மராத்தா வீரத்தின் தலைமைப்பீடம்

14

17ம் நூற்றாண்டில் முகலாயர்களை தீவிரமாக எதிர்த்து நின்ற சிவாஜி தனக்கும் தனது படையினருக்குமான பாதுகாப்பான கேந்திரமாக ராய்கர் கோட்டையை உருவாக்கி வைத்திருந்தார். மூன்று புறம் உயரமான மலைச்சிகரங்கள் மற்றும் மலைச்சரிவுகள் மற்றும் ஒரு புறத்தில் காவல் கோபுரங்களுடன் கூடிய வாசல் ஆகியவற்றுடன் இந்த கோட்டை ஒரு அற்புதமான பாதுகாப்பு வளாகமாக சிவாஜி மன்னரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு குறுகலான பாதையின் மூலமாக மட்டுமே இந்த கோட்டைக்குள் நுழையமுடியும் என்பதால் எதிரிகளுக்கு இந்த கோட்டை பெரும் சவாலாக இருந்திருக்கிறது. மராத்தா வம்சத்தின் சிறப்பான தலைநகராக இந்த ராய்கர் கோட்டை திகழ்ந்திருக்கிறது.

ராய்கர் கோட்டை சிறப்பம்சங்கள்

ராய்கர் கோட்டை மும்பை மாநகரத்திலிருந்து 174 கி.மீ தெற்கே அமைந்திருக்கிறது. இந்த கோட்டையின் ஆதி நிர்மாணம் 1030ம் ஆண்டில் மோரஸ் எனும் மன்னரால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் ஆங்கிலேயர்களால் போரின்போது சேதப்படுத்தப்பட்டுவிட்டதால் இந்த கோட்டையின் மிச்சங்கள் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. ராணிகள் வசித்த அந்தப்புர மாளிகை மட்டும் 6 அறைகளுடன் முழுமையாக உள்ளது. இவை ஒவ்வொன்றிலும் பிரத்யேக குளியல் அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், சில காவல் கொத்தளங்களையும் முழுமையாக பார்க்க முடிகிறது. தண்டனைக்கைதிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் கூடமாக பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தையும் இங்கு பார்க்கலாம்.

ஆதியில் இந்த கோட்டையை நோக்கி செல்லும் வழியானது 1500 படிக்கட்டுகளை கொண்டிருந்தது. தற்போது சுற்றுலாப்பயணிகள் கோட்டை உச்சிக்கு சென்று பார்ப்பதற்காகவே ‘ரோப் கார்’ வசதி செய்யப்பட்டிருக்கிறது. சிவாஜி மன்னர் வழிபட்ட கோயில் மற்றும் அவரது அரியணை அறைக்கு அருகிலேயே அவரது சிலை ஒன்றும் அமைந்திருக்கிறது.

இந்த கோட்டையின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நீராதாரமாக கங்கா சாகர் ஏரி பயன்பட்டிருக்கிறது. இது இன்றும் நல்ல நிலையில் உள்ள நீர்த்தேக்கமாக காட்சியளிக்கிறது.

இந்த ஏரியை ஒட்டி காணப்படும் இயற்கைக்காட்சிகள் புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்றதாக உள்ளன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டியர் கால ஆட்சிக்குரிய கோட்டைகள் பல அமைந்திருந்தாலும் அவை யாவற்றையும்விட இந்த ராய்கர் கோட்டை நன்கு பாதுகாத்து வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

ராய்கர் கோட்டைக்கு விஜயம் செய்ய ஏற்ற பருவம்

குளிர்காலமே ராய்கோட்டைக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

எப்படி செல்வது ராய்கர் கோட்டைக்கு?

சாலை மார்க்கமாக மட்டுமே ராய்கர் கோட்டைக்கு செல்ல முடியும்.

ராய்கர் கோட்டை சிறப்பு

ராய்கர் கோட்டை வானிலை

சிறந்த காலநிலை ராய்கர் கோட்டை

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ராய்கர் கோட்டை

  • சாலை வழியாக
    ராய்கர் கோட்டைக்கு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்வது ஒன்றே ஏற்றதாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 7 மூலமாக மும்பையிலிருந்து ராய்கர் கோட்டைக்கு வரலாம். லோனாவாலா, கண்டலா, மாத்தேரான் மற்றும் புனே நகரங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் இங்கு வரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரயில் மார்க்கமாக ராய்கர் கோட்டைக்கு பயணம் மேற்கொள்வது அவ்வளவு சௌகரியமாக இருக்காது என்றாலும் கொங்கண் ரயில் பாதையில் உள்ள லோனாவாலா, சிக்காலே, பாண்வெல் மற்றும் புனே ரயில் நிலையங்கள் வழியாக ராய்கர் கோட்டைக்கு வரலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    விமான மார்க்கமாக ராய்கர் கோட்டையை சென்றடைவது சாத்தியமில்லை. இருப்பினும் அருகில் மும்பை மற்றும் புனே நகர விமான நிலையங்கள் அமைந்திருக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Sat
Return On
26 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Sat
Check Out
26 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Sat
Return On
26 Apr,Sun