Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரைஸென் » வானிலை

ரைஸென் வானிலை

ரைஸெனுக்கு  பருவமழை காலத்தில் சுற்றுலா செல்ல முடியும் என்றாலும், குளிர் காலத்தில் செல்வதே மிகவும் சிறந்தது. குளிர்காலங்களில் வானிலை மிகவும் இனிமையாக காணப்படும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இங்கு குளிர் காலம் தொடங்கும். அப்பொழுது இங்கு வானிலை மிகவும் இனிமையாக காணப்படும். எனவே அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களே ரைஸெனுக்கு சுற்றுலா செல்லவதே மிகவும் சிறந்தது. 

கோடைகாலம்

கோடை காலங்களில் ரைஸெனின் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸிற்கு மேல் செல்லக் கூடும்.  மத்திய பிரதேசம் மாநிலம்  கடக ரேகையில் அமைந்துள்ளதால் இயற்கையாக கோடைகாலங்களில் மிகவும் வெப்பமாக காணப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் கோடை காலங்க்ளில் இங்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைக்காலம்

மிதமானது முதல் நடுத்தரமானது வரையிலான மழையை நாம் இந்தப் பருவ காலத்தில் இங்கு எதிர்பார்க்கலாம். இங்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை லேசான மற்றும் இனிமையான  காலநிலை நிலவுகிறது. இந்த பருவங்களில் பகல் பொழுது வெப்பமாக இருந்தாலும் இரவுப் பொழுது குளிர்ந்து இனிமையாக காணப்படும். பருவமழை கால சிறிய தொந்தரவுகளை தவிர்த்து ரைஸெனுக்கு சுற்றுலா செல்ல இதுவே சிறந்த பருவம் ஆகும்.

குளிர்காலம்

குளிர்காலமே ரைஸெனுக்கு சுற்றுலா செல்ல மிகவும் சிறந்தது.  இந்த நேரத்தில் குளிரின் காரணமாக பிற பருவங்களை காட்டிலும் பயணக் களைப்பு அதிகம் தெரிவதில்லை.  எனினும், மத்திய பிரதேச மாநிலத்தின் சில இடங்களில் இந்த பருவத்தில் உறைபனி ஏற்படுகிறது. எனவே உங்களுடைய பயண திட்டத்தை தயாரிக்கும் முன்னர் அந்த இடங்களின் வெப்பநிலையைப் பற்றி தெரிந்து கொள்வது உங்களுக்கு உதவும்.