Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரவங்க்லா » வானிலை

ரவங்க்லா வானிலை

ரவங்க்லாவின் குளிர்காலத்தில் கடுமையான குளிர் இருக்கும் மற்றபடி ஆண்டு முழுவதும் இதமான குளிரை அனுபவிக்கலாம். கோடை காலமே இங்கு செல்ல சிறந்த தருணம்.

கோடைகாலம்

இங்கே கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி மே வரை இருக்கின்றது. இந்த நேரத்தில் வெப்பநிலை 28 ° C மற்றும் 10 ° c ஆக  பதிவாகும். நீங்கள் கோடை காலத்தில் இங்கு வர ஆசைப் பட்டால் மெல்லிய குளிர் கால உடைகளை எடுத்து வரலாம். எனினும் கோடைக்காலமே இங்கு வர சிறந்த பருவம்.

மழைக்காலம்

இங்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ளது. இப்பருவம் அக்டோபர் வரை கூட நீடிக்கலாம். மழைக்காலத்தில் செல்ல நவம்பர் மாதமே ஏதுவான பருவம்.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் ரவங்க்லாவின் குளிர்காலத் தொடக்கத்தை குறிக்கின்றது. இந்த சீசன் பிப்ரவரி வரை தொடர்கிறது. இப்பருவத்தில் இங்கு வெப்பநிலை -5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 16 ° செல்சியஸ் தாண்டாது. ரவங்க்லா செல்ல இது ஏற்ற பருவம் கிடையாது.