Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரி போய் » வானிலை

ரி போய் வானிலை

ரி போய் மாவட்டத்தில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு இருந்தாலும் கோடைக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதே உகந்ததாகும். கோடைக்காலத்தில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதால் இந்த இடத்தை சுற்றிப் பார்க்க வசதியாக இருக்கும். கோடைக்கால வெப்பம் அதிகப்படியாக இருந்தாலும் இங்குள்ள மரங்கள் அதனை ஓரளவு சமாளிக்கச் செய்யும்.

கோடைகாலம்

இந்த மாவட்டத்தில் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் கோடைக்காலமாக அறியப்படுகிறது. இக்காலத்தில் இந்த வட்டாரத்தில் மிதமான வெப்பம் முதல் கடுமையான வெப்பம் வரை நிலவும். அதிகப்பட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் தட்ப வெப்பநிலை சராசரியாக 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும், முக்கியமாக நோங்போவில். வருடங்கள் கூட கூட இந்த வட்டாரத்தில் தட்ப வெப்பநிலை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

மழைக்காலம்

மேகாலயா மாநிலத்தில் உள்ள மற்ற இடங்களை போல மழைக்காலத்தில் இங்கேயும் பேய் மழை பெய்யும். ஜூன் மாத கடைசியில் அல்லது ஜூலை மாதம் தொடக்கத்தில் ஆரம்பிக்கும் பருவக்காலம் செப்டம்பர் அல்லது அக்டோபர் வரை நீடிக்கும். இருப்பினும் உலக வெப்பமயம் காரணமாக இங்கே மழை பெருமளவில் குறைந்து விட்டது. உமியம் ஏரியின் நீர் வரத்து குறைந்து போனதே இதற்கு சாட்சியாக விளங்குகிறது.

குளிர்காலம்

ரி போய்யில் டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குளிர் காலம் நிலவும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை பெருவாரியாக குறைந்து கொண்டே போகும். குறைந்தபட்ச அளவாக 4 டிகிரி செல்சியஸ் வரை தட்ப வெப்பநிலை கீழிறங்கும். இக்காலத்தில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குளிரை தாங்கும் உல்லன் உடைகளை எடுத்து வருவது நல்லது.