குளிர்காலத்திற்கு பின்பு வரும் பருவமே இந்த ரிஷ்யப் சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.
கோடைக்காலத்தில் ரிஷ்யப் சுற்றுலாத்தலம் மிதமான சூழலுடன் காட்சியளிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 32°C க்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை.
ஜுன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் இங்கு கடுமையான மழைப்பொழிவு காணப்படுகிறது. எனவே மழைக்காலம் இப்பகுதிக்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றதல்ல.
10°C க்கு கீழே செல்லும் குறைந்தபட்ச வெப்பநிலை நிலவும் குளிர்காலத்தில் ரிஷ்யப் மலைவாசஸ்தலம் கடுமையான குளிருடன் காணப்படும்.