Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சஞ்சி » வானிலை

சஞ்சி வானிலை

சஞ்சி செல்வதற்கு ஏற்ற காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆகும். இந்த காலத்தில்தான் அதாவது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இங்கு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும். அதுபோல் நவம்பர் மாதம் நடைபெறும் செதியாகிரி விழாவையும் பயணிகள் அனுபவிக்க முடியும்.

கோடைகாலம்

பொதுவாகவே கோடைகாலத்தில் சஞ்சி அதிக வெப்பமாகவும், அதிக வெப்பச் சலனத்துடனும் காணப்படும். மார்ச் முதல் மே மாதம் வரை இங்கு கோடைகாலம் நிலவுகிறது. இந்த காலத்தில் 25  முதல் 45 டிகிர செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். அதனால் இந்த காலத்தில் வெயில் மிக உக்கிரமாக இருக்கும்.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை சஞ்சியில் மழைக்காலம் ஆகும். இந்த காலத்தில் அங்கு மிகப் பெரிய அளவில் மழைப் பொழிவும், ஒரு சில நேரங்களில் சாரல் மழையும் இருக்கும்.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை சஞ்சியில் குளிர்காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் குறைந்தபட்சமாக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இங்கு உணரப்படும்.