சாங்க்லி மாவட்டத்திலுள்ள மிக முக்கியமான ஒரு ஆன்மீகச்சின்னம் இந்த ஸ்ரீ கணபதி மந்திர் ஆகும். சாங்க்லி ராஜாவான அப்பாசாஹேப் பட்வர்தன் என்பவரால் 1811ம் ஆண்டிலிருந்து 1844ம் ஆண்டு வரை சுமார் 30 வருடங்களில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்டக்காலத்தின் போது மஹாத்மா காந்தி மற்றும் லோகமான்ய திலகர் போன்றவர்களால் இந்த கோயில் விஜயம் செய்யப்பட்டிருக்கிறது.
கருங்கற்களால் ஆன சுற்றுச்சுவரையும் மரங்களால் ஆன கோயிற்கதவுகளையும் இந்தக் கோயில் பெற்றிருக்க்கிறது. இரண்டு ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கோயில் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications