Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சர்ச்சு » வானிலை

சர்ச்சு வானிலை

சர்ச்சுவிற்கு சுற்றுலா வர சிறந்த சீசனாக ஜுன் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் விளங்குகின்றன. இந்த நாட்களில் சர்ச்சுவின் வெப்பநிலை மிதவெப்பமுடையதாக, சராசரியாக 25°C இருக்கும். எனவே மிதவெப்பமுடைய பருவநிலை நிலவும் கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்கு தடையின்றி சர்ச்சுவை சுற்றிப் பார்க்க முடியும்.

கோடைகாலம்

சர்ச்சுவில் கோடைக்காலம் ஜுன் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் நீடித்திருக்கும். இந்நாட்களில் சராசரி வெப்பநிலை 25°C ஆக இருப்பதால், அது மலையேற்றம் போன்ற சாகச விளையாட்டுகளை மேற்கொள்ளவும், சுற்றிப் பார்க்கவும சிறந்த பருவமாக உள்ளது.

மழைக்காலம்

மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் சர்ச்சுவின் மழைக்காலம் ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் சொற்ப மழையுடன் முடிவடைகிறது. எனினும், இம்மாதங்களில் தான் சர்ச்சுவின் அதிகபட்ச மழைப்பொழிவு இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளிர்காலம்

அக்டோபரில் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும் குளிர்காலத்தில் சர்ச்சுவின் வெப்பநிலை சுமார் -35°C வரை குறைந்து விடும். இக்காலங்களில் இங்குள்ள நெடுஞ்சாலையும், முகாமிடும் இடங்களும் மூடப்பட்டு விடும். எனவே குளிர்காலத்தில் சர்ச்சுவிற்கு சுற்றுலாப் பயணிகள் வராமலிருப்பதே நலம்.