சட்னாவில் அமைந்திருக்கும் சிவன் ஆலயம், சிவபெருமானுக்கு நேர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. சட்னாவுக்கு வடக்கில் 30கிமீ தொலைவில் பிர்சிங்பூர் என்ற இடத்தில் இந்த சிவன் ஆலயம் அமைந்திருக்கிறது. பிர்சிங்பூர், சட்னா மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
19 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த வீர் சிங் என்ன மன்னது பெயரால் இந்த இடம் பிர்சிங் என்று அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் சிவன் ஆலயம் ஒரு மிகவும் பழமையான ஆலயம் ஆகும்.
வருடம் முழுவதும் இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சட்னாவிலிருந்து பேருந்து மூலமாக சிவன் ஆலயத்திற்கு மிகவும் எளிதாகச் செல்லலாம்.
சிவன் ஆலயத்தைப் பார்த்த பின்பு பிர்சிங்பூர் மற்றும் அதற்கு அருகில் உள்ள ஜயித்வாரா பகுதியில் அமைந்துள்ள பாக்ஸைட் சுரங்கங்களையும் சுற்றிப் பார்த்து வரலாம்.



Click it and Unblock the Notifications