Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிவ்புரி » வானிலை

ஷிவ்புரி வானிலை

ஷிவ்புரி பகுதிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள அக்டோபர் மற்றும் மார்ச் வரையிலான மாதங்கள் ஏற்றதாக உள்ளன. கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் அக்காலத்தை தவிர்த்துவிடுவது நல்லது. இருப்பினும் டைகர் சஃபாரி எனும் காட்டுச்சுற்றுலாவில் ஈடுபடுவதற்கு கோடைக்காலமே உகந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  மழைக்காலத்தில் ஏரிகளும் நீர்வீழ்ச்சிகளும் நிரம்பி வழிவதால் அவற்றை பார்த்து ரசிப்பதற்கு மழைக்காலமே பொருத்தமாக இருக்கும்.

கோடைகாலம்

மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள ஷிவ்புரி நகரம் வறண்ட வெப்பமான கோடைக்காலத்தை பெற்றுள்ளது. இருப்பிமும் அடர்ந்த தாவரச்செழிப்பையும், அதிகமான மழைப்பொழிவையும் பெற்றிருப்பதோடு பறவைகள் சரணாலயம் மற்றும் ஏரிகள் ஆகியவற்றையும் கொண்டிருப்பதால் வெயிலிலிருந்து காத்துக்கொள்வது எளிதாகவே உள்ளது. கோடையின் உச்சமான ஜுன் மாதத்தில் இங்கு 42°C  வரை வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை ஷிவ்புரி பகுதியில் கடுமையான மழைப்பொழிவு நிலவுகிறது. இக்காலத்தில் ஏரிகளும் நீர்வீழ்ச்சிகளும் நிரம்பி வழிவதால் அவற்றை பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற காலமாகவும் விளங்குகிறது. மழைக்காலத்தில் இங்கு சராசரியாக 20°C  வெப்பநிலை நிலவுகிறது. மழைச்சாரலோடு கூடிய இதமான சூழல் இக்காலத்தில் காணப்படுகிறது. இருப்பினும் மாதவ் தேசியப்பூங்காவிற்கு செய்து ரசிப்பதற்கு மழைக்காலம் ஏற்றதல்ல.

குளிர்காலம்

குளிர்காலத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் பெரும்பாலும் குளுமையுடன் 4°C முதல்  32°C  வரையிலான வெப்பநிலையுடன் காணப்படுகிறது.  உலர்ந்த குளுமையான சூழல் நிலவும் இந்த குளிர்காலம் ஷிவ்புரிக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இருப்பினும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து காட்சியளிக்கும் அவற்றை பார்த்து ரசிப்பதற்கு இது ஏற்ற காலம் இல்லை.