Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷோகி » வானிலை

ஷோகி வானிலை

ஷோகி நகரம்  வருடமுழுதுமே மிதமான பருவநிலையை கொண்டுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இங்கு விஜயம் செய்யலாம். இருப்பினும் ஜனவரி மாதத்தில் கடும்குளிர் நிலவும் என்பதால் பயணிகள் அம்மாதத்தில் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : ஷோகி நகரத்தில் மார்ச் தொடங்கி ஜூன் வரை  கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 27°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 14°C வெப்பநிலையும் காணப்படுகிறது. கோடையில் ஷோகீ நகரம் வெதுவெதுப்பான உஷ்ணத்துடன் காட்சியளிக்கிறது.

மழைக்காலம்

( ஜூலை முதல் ஆகஸ்ட் வரை) : ஷோகி பிரதேசத்தில் ஜூலை துவங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் நிலவும் மழைக்காலத்தில் மிதமான மழைப்பொழிவு காணப்படுகிறது.  ஷோகி பிரதேசம் முழுதும் இக்காலத்தில் பசுமையின் எழிலோடு  ஜொலிப்பதால் பயணிகள் மழைக்காலத்தில்  ஷோகி நகரத்திற்கு விஜயம் செய்வதை விரும்புகின்றனர்.

குளிர்காலம்

( நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : ஷோகி பிரதேசத்தில் நவம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் அதிகக்குளிர் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 10°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக -4°C வெப்பநிலையும் நிலவுகிறது. இக்காலத்தில் சிறிதளவு பனிப்பொழிவும் காணப்படுகிறது.