சிர்ஸா நகரத்தில் நவம்பர் முதல் ஏப்ரல் மாதங்களில் மிதமான மற்றும் மகிழ்ச்சிகரமான பருவநிலை இருப்பதால் இந்நாட்களில் சுற்றுலா வரலாம். எனினும், இங்கிருக்கும் மதத் தலங்களும், கோவில்களும் வருடம் முழுவதுமே சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடங்களாக உள்ளன.
மார்ச் முதல் மே மாதங்களில் இருக்கும் கோடைக்காலம், சில வேளைகளில் ஜுன் மாதம் வரையிலும் கூட நீண்டு செல்லும். இந்நாட்களில் 22°C முதல் 40°C வரையில் இருக்கும் வெப்பநிலை மிகவும் வெப்பமாகவும், தாங்க முடியாத அளவு காற்றுடனும் இருக்கும்.
ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலங்களில் சிர்ஸா நகரம் பெருமளவு கனமழையைப் பெறும் இடமாக உள்ளது. இந்நாட்களில் வானம் மேகமூட்டத்துடனும் மற்றும் ஈரப்பதமான சூழலுடனும் சிர்ஸா காணப்படும்.
சிர்ஸாவின் குளிர்காலம் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலும் நிலவுகிறது. இந்நாட்களில் மிதமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் பருவநிலை, 12°C முதல் 20°C வரையிலுமே வெப்பநிலையைப் பெற்றிருக்கும்.