நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் வரையிலான பருவமே இந்த ஷ்ரவஸ்தி நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இருப்பினும் புலிகள் பாதுகாப்பு சரகம் மற்றும் ஆன்மீக தலங்கள் போன்றவை வருடம் முழுதுமே சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகின்றன.
(மார்ச் முதல் மே வரை) : ஷ்ரவஸ்தி நகரத்தில் மார்ச் முதல் மே வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் 28°C துவங்கி அதிகபட்சம் 40°C வரை வெப்பநிலை செல்லக்கூடும்..
(ஜுலை முதல் செப்டம்பர் வரை) : ஜுலை முதல் செப்டம்பர் வரை ஷ்ரவஸ்தி நகரத்தில் மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் இங்கு கடும் மழைப்பொழிவு நிலவுகிறது. மேலும் நகர்ப்பகுதி ஈரமாகவும் சூழலில் ஈரப்பதம் நிரம்பியும் காணப்படும். விட்டுவிட்டு கனமழையும் பெய்யக்கூடும்.
(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : ஷ்ரவஸ்தி நகரத்தில் குளிர்காலத்தின்போது இதமான இனிமையான சூழல் காணப்படுகிறது. இக்காலத்தில் 12°C துவங்கி அதிகபட்சம் 25°C வரை வெப்பநிலை நிலவுகிறது.