Search
  • Follow NativePlanet
Share

ஷ்ரவஸ்தி – பௌத்தத்தின் அற்புத வரலாற்று சுவடுகள்

19

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆறு மிகப்பெரிய  நகரங்களுள் ஒன்றாக இந்த ஷ்ரவஸ்தி நகரம் கௌதம புத்தரின் காலத்தில் விளங்கியிருக்கிறது. மஹாபாரத காவியத்திலும் இந்த நகரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஷ்ரவஸ்தா எனும் புராண காலத்தை சேர்ந்த மன்னரின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. இருப்பினும் புத்த மரபை சேர்ந்தவர்கள் இந்த நகரம் சவத்தா எனும்  புத்த குருவின் பெயரால்  அழைக்கப்படுவதாக நம்புகின்றனர்.

ஷ்ரவஸ்தி மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

புத்த மதப்பிரிவினரின் முக்கிய யாத்ரீக ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் இந்த ஸ்ரவஸ்தி நகரத்துக்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் ஷீலங்கா, ஜப்பான், சைனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்குள்ள ஜெதாவனா எனும் மடாலயத்தில் புத்தர் பல வருடங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. ஆனந்தபிந்திகா எனும் சீடரின் அழைப்பின்பேரில் புத்தர் இந்த நகரத்துக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நகரத்தில் ரப்தி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மாஹேத் எனும் பௌத்தக்கோயில் மண்ணால் ஆன சுற்றுச்சுவரால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. இதில் பல நுழைவாயில்களும் நான்கு உயரமான காவற்கோபுரங்களும் அமைந்துள்ளன.

சாகேத் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது பல்வேறு புத்த கட்டிடச்சின்னங்களின் தளங்கள் மற்றும் ஸ்தூபி அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

இப்பகுதியிலுள்ள பல்ராம்பூர் மாவட்டம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரபல்யமடைந்துள்ளது. ஷ்ரவஸ்திக்கு வரும் பயணிகள் பயக்பூர் மற்றும் கர்க்பூர் போன்ற அழகிய கிராமங்களுக்கும் விஜயம் செய்யலாம்.

வரலாறு

ரப்தி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஷ்ரவஸ்தி நகரம் கோசல ராஜ்ஜியத்தின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. புத்தரின் சீடரான பசேனாதி எனும் மன்னர் இந்நகரத்தை ஆண்டுள்ளார்.

புத்தர் தனது சந்நியாச வாழ்க்கையின் பெரும்பகுதியை இங்கு கழித்ததாக சொல்லப்படுகிறது. ஜேதவனா, புப்பரமா மற்றும் ராஜகரமா போன்ற மடாலயங்கள் இங்கு பசேனாதி மன்னரால் கட்டப்பட்டிருக்கின்றன.

இன்றும் சவத்தி நகரத்தின் கோட்டைச்சுவர்களை பார்க்க முடிகிறது. இதணுள்ளே மூன்று புராதன கட்டிடங்களை பார்க்க முடிகிறது. ஆனந்தபிந்திகா ஸ்தூபி, அங்குலிமாலா ஸ்தூபி மற்றும் ஒரு புராதன ஜைன தீர்த்தங்கரர் கோயில் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.

நகர  நுழைவாயில்களுக்கு வெளியே இரட்டை அதிசயங்கள் நிகழ்ந்த மற்றொரு ஸ்தூபி ஸ்தலமும் உள்ளது.

புத்தர் ஷ்ரவஸ்தி நகரத்தில் கழித்த 25 மழைக்காலங்களில்  ஜெதவன மடாலயத்தில் 19 காலங்களையும், புப்பரமா மடாலயத்தில் 6 காலங்களையும் கழித்துள்ளார். தனது பெரும்பாலான ஆன்மீக உரைகளை இந்த ஷ்ரவஸ்தி நகரத்தில்தான் புத்தர் அளித்ததாக சொல்லப்படுகிறது.

ஷ்ரவஸ்தி நகரம் ஜைன இனத்தாரின் முக்கிய யாத்ரீக ஸ்தலமாகவும் விளங்குகிறது. மூன்றாவது ஜைன தீர்த்தங்கரரான சம்பவநாதர் இங்கு பிறந்துள்ளார்.

ஷ்ரவஸ்தி சிறப்பு

ஷ்ரவஸ்தி வானிலை

சிறந்த காலநிலை ஷ்ரவஸ்தி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஷ்ரவஸ்தி

  • சாலை வழியாக
    ஷ்ரவஸ்தி நகரம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களோடு அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்து சேவைகளை கொண்டுள்ளது. லக்னோ, வாரணாசி மற்றும் சாரநாத் போன்ற நகரங்களிலிருந்து ஷ்ரவஸ்திக்கு அதிகம் பேருந்து சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரயில் மார்க்கமாக ஷ்ரவஸ்தி நகரத்தை சென்றடைய இரண்டு ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. ஒன்று பலராம்பூர் மற்றொன்று கொண்டா. இவற்றில் பல்ராம்பூர் மிகச்சிறிய ரயில் நிலையமாகும். கொண்டா ரயில் நிலையமே மிகப்பெரிய ரயில் நிலையமாகவும் டெல்லி, அஹமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஆக்ரா போன்ற முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகளை கொண்டதாகவும் அமைந்துள்ளது. இங்கிருந்து இங்கிருந்து டாக்சிகள் அல்லது அரசுப்பேருந்துகள் மூலம் பயணிகள் ஷ்ரவஸ்தி நகரத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஷ்ரவஸ்தி நகரத்திற்கு அருகில் லக்னோ விமான நிலையம் உள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, ஆக்ரா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து லக்னோவுக்கு விமான சேவைகள் உள்ளன. இங்கிருந்து டாக்சிகள் அல்லது அரசுப்பேருந்துகள் மூலம் பயணிகள் ஷ்ரவஸ்தி நகரத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat

Near by City