Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷ்ரவஸ்தி » ஈர்க்கும் இடங்கள் » ஜேதவனா மடாலயம்

ஜேதவனா மடாலயம், ஷ்ரவஸ்தி

7

புராதன காலத்தி மிகவும் பிரசித்தமாக அறியப்பட்ட புத்த மடாலயங்களில் ஒன்று இந்த ஜேதவனா மடாலயம் ஆகும். கௌதம புத்தருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இரண்டாவது மடாலயமான இது அவரது ஆன்மீக கருத்துக்களையும் மதத்தையும் பரப்பும் நோக்கில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். இந்த மடாலயத்தில் பல ஆன்மீக உரைகளைபுத்தர் தன் வாழ்நாளில் நிகழ்த்தியுள்ளார்.

தற்போது புத்த மத ஆர்வலர்களும் யோகிகளும் இந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்து தங்கள் மரியாதையை செலுத்துகின்றனர். ஒரு வரலாற்று பூங்காவாக இந்த ஸ்தலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நிசப்தம் நிலவும் சூழலில் காலம் பல கடந்து வீற்றிருக்கும் கற்சின்னங்கள் நம்மிடம் மௌனக்கதைகள் பேசும் அமானுஷ்யத்தை இந்த ஸ்தலத்தில் உணரலாம்.

வரலாற்றுக்குறிப்புகளின்படி இந்த ஜேதவனா ஸ்தலத்திந்தான் புத்தர் தனது அதிகமான ஆன்மீக உரைகளை வழங்கியதாக அறியப்படுகிறது. இருப்பினும் மிகாரமதுபாசதா எனும் இரண்டாவது மடாலயம் கட்டப்பட்ட பின்னர் அங்கும் இங்குமாக தனது உரை ஸ்தலங்களை மாற்றி பயன்படுத்தியுள்ளார்.  

இந்த வளாகத்தில் சந்தன்மாலா, காவேரி மண்டலமாலா, முலகந்தகுடி மற்றும் கோசாம்ப குடி ஆகிய கட்டிட அமைப்புகள் காணப்படுகின்றன. வளாகத்திற்கு வெளியே சமித்திசுமனா எனும் குரு வசித்த இருப்பிடமும் ஒரு பழைய ராஜயதானா மரமும் அமைந்திருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed