Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷ்ரவஸ்தி » ஈர்க்கும் இடங்கள் » மாஹேத்

மாஹேத், ஷ்ரவஸ்தி

19

ஷ்ரவஸ்தி நகரத்தின் மிக முக்கியமான புத்த கோயிலாக இந்த மாஹேத் விளங்குகிறது. வரலாற்றுக்குறிப்புகளின்படி அக்காலத்திய ஷ்ரவஸ்தி நகரம் வீற்றிருந்த இடமே இந்த மாஹேத் ஸ்தலம் என்று சொல்லப்படுகிறது.

400 ஏக்கர் பரப்பில் பரந்து காணப்படும் இந்த வரலாற்றுத்தலத்தில் ஆங்காங்கு சிதிலமடைந்த ஸ்தூபிகள் மற்றும் புராதன புத்தக்கோயில்கள் போன்றவற்றின் இடிபாடுகள் தென்படுகின்றன.

இந்த முக்கியமான வரலாற்று ஸ்தலம் பல வருடங்கள் கவனிக்கப்படாமல் கிடந்தது என்பது ஒரு வேதனையான தகவலாகும். 20ம் நூற்றாண்டில் இங்கு அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இதன் பழமையான சின்னங்கள் வெளிக்கொணரப்பட்டன. இந்த இடத்தில் ஒரு புராதன ஷோபநாதர் கோயிலும் அமைந்துள்ளது.

வரலாற்று ஆர்வலர்களும் பௌத்த மார்க்க பிரியர்களும் தம் வாழ்நாளில் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு ஸ்தலம் இந்த மாஹேத்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon