ஸ்ரீசைலம் நகரை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.
(மார்ச் முதல் ஜூன் வரை) : ஸ்ரீசைலம் நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 42 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களில் வெப்பம் சுட்டெரிப்பதால் பயணிகள் இந்த காலங்களில் ஸ்ரீசைலம் நகருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.
(ஜூலை முதல் நவம்பர் வரை) : ஸ்ரீசைலம் நகரின் மழைக் காலங்களில் மிதமான மழைப் பொழிவு இருக்கும். இந்த காலங்களில் 32 டிகிரி அளவில் வெப்பநிலை நிலவுவதோடு, ஈரப்பதம் அதிகமாக காணப்படுவதால் மழைக் காலங்களில் ஸ்ரீசைலம் நகருக்கு சுற்றுலா வருவது அவ்வளவு உகந்தது அல்ல.
(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : ஸ்ரீசைலம் நகரின் பனிக் காலங்களில் 29 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் மதிய வேளையில் வெதுவெதுப்பான வானிலையும், மாலையில் சற்று குளிர்ச்சியான வானிலையும் நிலவும்.