ஸ்ரீசைலம் - மோட்சம் தரும் புண்ணிய பூமி!

சீமாந்திராவின் கர்ணூல் மாவட்டத்தில், நல்லமலா குன்றின் மீது கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ஸ்ரீசைலம் நகரம் அதன் சமயச் சிறப்புக்காக இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய நகரம் ஹைதராபாத்திலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீசைலம் நகரத்துக்கு ஆண்டு தோறும் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டமாக கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்த நகரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்காகவும், தீர்தங்களுக்காகவும் புனித யாத்ரீகர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

ஸ்ரீசைலம் நகரின் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக கருதப்படும் பிரம்மாரம்பா மல்லிகார்ஜுனசுவாமி கோயில் சிவபெருமானுக்காகவும், பார்வதி தேவிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இங்கு மல்லிகார்ஜுனசுவாமி வடிவத்தில் சிவனும், பிரம்மாரம்பா வடிவத்தில் பார்வதியையும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோயில் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாக கருதப்படுவதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்ரீசைலம் வரும்போது நீங்கள் மல்லேல தீர்த்தம் எனப்படும் அழகிய அருவியை தவற விட்டுவிடக் கூடாது. இந்த அருவியின் நீர் பாவங்களை கழுவும் சக்தி உள்ளதாக நம்பப்படுவதால் இங்கு ஏராளமான பக்தர்கள் கூட்டத்தை பார்க்கலாம்.

ஸ்ரீசைலம் நகரத்தில் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் ஏதுமில்லை என்றாலும் சுலபமாக நகரை அடைந்து விட முடியும். இந்த சமயச் சிறப்பு வாய்ந்த நகரத்துக்கு பனிக் காலங்களில் சுற்றுலா வருவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

Please Wait while comments are loading...