அமராவதி - சரித்திரத்தை நோக்கி நடைபோடுவோம்!

சீமாந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அமராவதி நகரம் அதன் அமரேஸ்வரா கோயிலுக்காக உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய நகரத்தில் மௌரிய காலத்திற்கும் முற்பட்ட புத்த ஸ்தூபி ஒன்று உள்ளது. இது போன்று மிகப்பெரிய ஸ்தூபி இதுவரை எங்கேயும் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

அமராவதி நகரம் தன்யகட்டகா அல்லது தரணிகொட்டா என்ற பெயர்களில் முன்னொரு காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நகரை தலைநகரமாக கொண்டு கி.மு 2-ஆம் மற்றும் 3-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பழைய ஆந்திராவின் முதல் ஆட்சியாளர்களாக கருதப்படும் சதவன்ஹனாஸ் ஆண்டு வந்தனர்.

அதோடு அமராவதி நகரில்தான் புத்தர் தன்னுடைய காலச்சக்ரா எனப்படும் போதனைகளை உபதேசம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் வஜ்ராயனா எனும் எழுத்து வடிவில் இங்கு காணப்படுவதோடு, அவை அமராவதி நகரம் கி.மு 500-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகவும் கூறுகிறது.

அமராவதியின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக அமராவதி ஸ்தூபம் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் கருதப்படுகின்றன. இவை தவிர கிருஷ்ணா நதிக்கரை ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

அமராவதியின் அருகாமை விமான நிலையமாக விஜயவாடா விமான நிலையம் அறியப்படுகிறது. அதோடு ஆந்திராவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற அரசுப் பேருந்துகள் அமராவதி நகருக்கு இயக்கப்படுகின்றன.

Please Wait while comments are loading...