Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சுசீந்திரம் » வானிலை

சுசீந்திரம் வானிலை

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலமே சுசீந்திரம் நகரத்திற்கு சுற்றுலா மேற்கொள்வதற்கான மிகச் சிறந்த பருவமாகும். சூரியனின் மென்மையான சூடு உணரப்படுவதால், இடங்களைச் சுற்றிப்பார்ப்பதற்கும், பயணங்கள் மேற்கொள்ளவும், இக்காலநிலை மிக உகந்ததாக அமைந்துள்ளது. இருப்பினும் சுற்றுலாப்பயணிகள்  குளிர்ச் சட்டைகள் மற்றும் போர்வைகளை உடன் எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோடைகாலம்

சுசீந்திரம் நகரில் மார்ச் மாதம் முதல் மே இறுதி வரை கோடைகாலமாகும்.  கோடைகாலத்தில், 30℃ - 35℃ வரை வெப்பம் நிலவுகிறது. காற்றின் ஈரப்பதம் கோடைக்காலங்களில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. காலை மற்றும் மதிய நேரங்களில், மிக அதிக அளவு, வெப்பம் காணப்பட்டாலும், விடியற்காலையிலும், மாலையிலும், இதமான குளிர்ந்த கடற்காற்று வீசுகிறது.

மழைக்காலம்

ஜூன், ஜூலை, ஆகஸ்டு, மற்றும் செப்டம்பர் மாதங்களில் மிக அதிக அளவு மழைப்பொழிவு உள்ளது. இம்மாதங்களில், மிக அதிக இடியுடன் கூடிய மழை பெய்கிறது. வெப்பநிலை 22 ℃ க்கு குறைவாக உணரப்படுகிறது. காற்றின் ஈரப்பதமும் அதிகரித்தே காணப்படுகிறது.  அதிகப்படியான மழையினால், இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே மழைக்காலங்களில் இங்கு சுற்றுலா மேற்கொள்வதைத் பயணிகள் தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

சுசீந்திரத்தின் குளிர் காலங்களான டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் வெப்பநிலை 19 ℃ ஆகவும், அதிக வெப்பநிலை 22℃  க்கும் குறைவாகவும் காணப்படுகிறது. மதிய வேளைகள் மிக இதமானதாகவும், மாலை மற்றும் இரவு நேரங்கள் அதிகக் குளிருடனும் காணப்படுகின்றன.