டேபோவிற்கு வர திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள் மார்ச் மாதம் தொடங்கி ஜுன் மாதம் முடிவடையும் கோடைகாலத்தில் வருவது சிறந்த அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். குளிர் காலம் கடும் குளிரை கொண்ட பருவநிலையாக இருப்பதால் டேபோவிற்கு குளிர்காலங்களில் வருவதை தவிர்க்கவும்.
மார்ச் மாதம் தொடங்கி ஜுன் மாதம் முடியும் வரை டேபோவில் கோடைகாலம் நிலவி வருகிறது. இந்த காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸீம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 6 டிகிரி செல்சியஸீம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
டேபோவில் குளிர்காலத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் மாதமாக செப்டம்பர் மாதம் இருக்கிறது. கடுமையான பனிப்பொழிவை சந்திக்கும் இடமாக இருக்கும் டாபோவில், குளிர்காலத்தின் வெப்பநிலை -20 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து பொய்விடும்.