Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேக்கடி » வானிலை

தேக்கடி வானிலை

தேக்கடி பகுதி கடுமையான கோடைக்காலம் மற்றும் மழைக்காலத்தை பெற்றுள்ளதால் இவ்விரண்டு பருவங்களுமே சுற்றுலாவுக்கு ஏற்றதாக இல்லை. எனினும் சரணாலயத்தை சுற்றிப்பார்ப்பதற்கும் வனவிலங்குகளை தரிசிக்கவும் விரும்பும் காட்டுயிர் ரசிகர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்களுக்கு கோடைக்காலமே ஏற்றதாகும். பொதுவாக குளிர்காலமானது தேக்கடியின் இயற்கை அழகை ரசிக்கவும் பயண அனுபவத்துக்கும் உகந்ததாக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஏராளமான புகலிடப்பறவைகளும் தேக்கடிக்கு குளிர்காலத்தில் விஜயம் செய்கின்றன.

கோடைகாலம்

தேக்கடி சுற்றுலாத்தலத்தில் கோடைக்காலமானது மார்ச் மாதத்தில் துவங்கி மே மாதம் வரை நீடிக்கிறது. கடுமையான வெப்பநிலை நிலவும் இக்காலத்தில் அதிகபட்சமாக 36° C வரை நிலவுகிறது. தேக்கடிக்கு கோடைக்காலத்தில் பயணம் மேற்கொள்வது அசௌகரியமாக இருந்தாலும் வனவிலங்குகளை இப்பருவத்தில் தான் காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலம்

தேக்கடி பகுதியில் மழைக்காலம் ஜுன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நிலவுகிறது. கடுமையான மழைப்பொழிவு காணப்படும் மழைக்காலத்தில் பயணிகள் தேக்கடிக்கு விஜயம் செய்வது சிரமமான மற்றும் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். மேலும், மலையேற்றம், வெளிக்காட்சிகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் இக்காலத்தில ஈடுபடவே முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம்

தேக்கடி பகுதியில் அக்டோபர் மாத துவக்கத்திலேயே ஆரம்பிக்கும் குளிர்காலம் பிப்ரவரி மாத இறுதி வரையில் நீடிக்கிறது இனிமையான இதமான சூழல் நிலவும் இக்காலத்தில் வெப்பநிலை 15° C வரை குறைந்து காணப்படுகிறது. எனவே இயற்கைக்காட்சிகளை சுற்றிப்பார்த்து ரசிக்கவும் காபித்தோட்டங்கள் போன்றவற்றுக்கு விஜயம் செய்யவும் இது மிகவும் ஏற்ற பருவமாகும்.