வருடந்தோறும், பல பக்தர்கள் பக்கத்து ஊர்களில் இருந்தும் தூரமாக உள்ள ஊர்களில் இருந்தும் இங்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஆனால் இவ்வூரை சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் அக்டோபர் மாதம் ஆரம்பித்து பிப்ரவரி மாதக் கடைசி வரை நீடிக்கும் குளிர்காலமேயாகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் மழைக்காலம் ரம்மியமாக இருந்தாலும் வெக்கையாக இருக்குமாதலால் இச்சமயத்தில் இங்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
திருக்கருக்காவூரில் மார்ச் முதல் மே மாதம் வரை கோடைகாலமாக அறியப்படுகிறது. இச்சமயத்தில், இங்கு வெப்பம் 25 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இச்சமயத்தில், இங்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படியெ செல்வதாக இருந்தால், மெல்லிய பருத்தி ஆடைகளை எடுத்துச் செல்வது உசிதம்.
திருக்கருக்காவூரில், மழைக்காலத்தின்போது மிதமான மழைப் பொழிவு இருக்கும். இவ்வாறு பெய்யும் மழையானது, இவ்வூரின் அழகை அதிகப்படுத்துவதோடல்லாமல், வெப்பத்தையும் கணிசமாகக் குறைக்கிறது. மழைக்காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். சில நேரங்களில், சிறு தூறல், பெருமழையாகவும் மாறுவதுண்டு. அதனால், இச்சமயத்தில், இங்கு செல்வதாக இருந்தால், குடை மற்றும் மழைக்கு அணியும் கோட் ஆகியவற்றை மறக்காமல் எடுத்துச் செல்வது நல்லது.
திருக்கருக்காவூரில், குளிர்காலம் அக்டோபர் மாதம் ஆரம்பித்து பிப்ரவரி மாதக் கடைசி வரை நீடிக்கும். இக்குளிர்காலத்தின்போது, வெப்பநிலை குறைந்து, 20 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை மிதமான தட்பவெப்ப நிலையில், குளிராக இருக்கும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், தூறலும் இருக்கும். இக்காலத்தின்போது இங்கு செல்வது சாலச்சிறந்தது.