Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» திருக்கருக்காவூர்

திருக்கருக்காவூர் – ஆலயமாய் திகழும் கிராமம்!

5

திருக்கருக்காவூர், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமமாகும். இந்த அமைதியான கிராமம், தஞ்சாவூர் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

திருக்கருக்காவூர், சிறு கிராமமாக இருப்பினும், இங்கு புகழ்பெற்ற “அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில் உள்ளதால், இது இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு தலமாக விளங்குகிறது.

வருடந்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். “கர்ப்பரக்ஷாம்பிகை கோயில்” என்றும் அழைக்கப்படும் இக்கோயில், பார்வதி தேவியின் அவதாரமான, கர்ப்பரக்ஷாம்பிகைத் தாயாருக்காகவே அமையப்பெற்ற ஒரு கோயிலாகும்.

குழந்தைப் பேறு கிடைக்க விரும்பும் தம்பதிகள் இத்தாயாரை வந்து வழிபட்டால் கட்டாயமாக அப்பேறு கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம்.

திருக்கருக்காவூர், பார்வதி தேவியால் மட்டுமல்லாது பூமாதேவியாலும் ஆசீர்வதிக்கப்பட்டு, பசுமையான சுற்றுச்சூழல் கொண்ட ஒரு அழகான இடமாகும். இவ்வூரின் அழகு, நகர வாழ்க்கையின் பரபரப்புகளிலிருந்து விடுபட்டு, அமைதியான சூழலில் தங்கிச் செல்ல விரும்புபவர்களை கவர்ந்திழுக்கக்கூடியதாக உள்ளது.

திருக்கருக்காவூரை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திலிருந்து, வான் வழியாகவோ, ரயில் மூலமாகவோ அல்லது சாலை வழியாகவோ எளிதில் அடையலாம்.

இவ்வூரின் வானிலை தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தின் வானிலை போலவே காணப்படுகிறது. கோடைகாலத்தில் இங்கு வானிலை மிக வெப்பமாக இருக்கும். வானிலை குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் இருக்கும் குளிர்கால மாதங்களே இங்கு செல்வதற்கு உகந்த காலகட்டமாகும்.

திருக்கருக்காவூர் சிறப்பு

திருக்கருக்காவூர் வானிலை

சிறந்த காலநிலை திருக்கருக்காவூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது திருக்கருக்காவூர்

  • சாலை வழியாக
    திருக்கருக்காவூரிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய பெருநகரங்களுக்கும், நகரங்களுக்கும் சாலை வழி போக்குவரத்து சேவைகள் உள்ளன. நாள்தோறும், ஏராளமான சுற்றுலா பேருந்துகள், உள்ளூர் பேருந்துகள் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து பேருந்துகள் திருக்கருக்காவூரிலிருந்து முக்கியமான ஊர்களுக்கு சீரான இடைவெளிகளில் இயங்குகின்றன. அதனால் இவ்வூருக்குச் செல்வது எளிதான ஒன்றாகவே உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    திருக்கருக்காவூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள கும்பகோணம் ரயில் நிலையமே இவ்வூருக்கு மிக அருகாமையில் உள்ள ரயில் நிலையமாகும். சென்னை, ராமேஸ்வரம், கொல்லம், பெங்களூரு, திருப்பதி ஆகிய ஊர்களில் இருந்து கும்பகோணம் வருவதற்கு ஏராளமான ரயில்கள் உள்ளன. இங்கிருந்து, உள்ளூர் பேருந்துகள் மூலம் திருக்கருக்காவூரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சுமார் 86 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சர்வதேச விமான நிலையம் தான் இவ்வூருக்கு மிக அருகில் அமைந்த விமான நிலையமாகும். திருச்சியிலிருந்து பேருந்து மூலமாக இவ்வூரை அடையலாம். அல்லது, விமான நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸி மூலமாக அருகாமையிலுள்ள தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களை அடைந்து, பின் ஒரு பேருந்து மூலமாக இவ்வூரை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Sep,Thu
Return On
18 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
17 Sep,Thu
Check Out
18 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
17 Sep,Thu
Return On
18 Sep,Fri