Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் - ஸ்ரீ இராமானுசர் பிறந்த சரித்திர பூமி!

15

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நகரமாகிய ஸ்ரீபெரும்புதூர் சுற்றுலா தலமாக வேகமாக உருமாறி வருகிறது. ஸ்ரீபெரும்புதூரின் பழைய பெயர் பூதபுரி. ஸ்ரீபெரும்புதூரில் மரணம் அடைந்தவர்களுக்காக சொர்க்க வாசல் திறந்து இருப்பதாக நம்பப்பட்டது. சமீப காலத்தில் பல சர்வதேச நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் தங்கள் அலுவலகங்களை அமைத்து இருக்கிறார்கள்.

1999 ஆம் ஆண்டு இந்திய கார் செயல்பாடுகளை முதன் முதலில் ஹுண்டாய் நிருவனம் இங்கு தொடங்கியது. அதன் பின்னர் செயிண்ட்-கொபெய்ன், நோக்கியா, பிஎம்டபில்யு.

மிட்சுபிஷி, ஹிந்துஸ்தான் மோட்டார்கள் மற்றும் நிசான் ஆகிய நிறுவனங்கள் இங்கு வருகை தரலாயின. பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் ஸ்ரீபெரும்புதூர் அமைந்து இருக்கிறது.

இதன் விளைவாக இந்த நகரம் விரைவாக தொழில்நகரமாக மாறி, வளர்ச்சி அடைந்து இருக்கிறது. 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட பிறகு இந்நகரம் 2008 ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார வட்டத்திற்குள் வந்தது. இதன் காரணமாக பல தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளை இது ஈர்த்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதை சுற்றி இருக்கும் சுற்றுலா தலங்கள்

21 மே 1991 ஆம் ஆண்டு முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட இடம் என்பதால் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவுமண்டபத்தை தமிழக அரசு கட்டியெழுப்பி இருக்கிறது. பல்வேறு சுற்றுலா பயணிகள் இங்கே வந்து மரியாதை செலுத்துகிறார்கள்.

ஆண்டு தோறும் இருங்கட்டுக்கோட்டையில் ’மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்’ நடத்தும் பந்தயங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மற்றும் ஒரு அம்சம் ஆகும். தென்னிந்திய ரேலி மற்றும் அனைத்து இந்திய மோட்டார் பந்தய சந்திப்பு ஆகியவற்றையும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பு செய்கின்றது.

ஃபார்முலா 3 பந்தயங்களை நடத்தவும் அவர்கள் அனுமதி பெற்று, உலக தரத்தில் பந்தயங்களை நடத்தி வருவது சீசன் காலத்தில் அநேக சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் வல்லக்கோட்டை முருகன் கோவில், 25 கி.மீ. தொலைவில் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தாம்பரம் விளையாட்டு பூங்கா, மெட்ராஸ் அணு மின் நிலையம் மற்றும் பிரம்மகுமாரி அருங்காட்சியகம் ஆகியவையும் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பு இடங்கள் ஆகும்.

ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த பிறகு, செங்கல்பட்டு பட்டணத்திற்கு செல்வதும் பயனுள்ளதாக அமையும். நேர்மறையான பாலினம் மற்றும் கல்வி விகிதங்களோடு இந்த பட்டணம் அழகாக காட்சி அளிக்கின்றது.

ஸ்ரீபெரும்புதூரை அடைவது எப்படி?

பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூரை எளிதில் அடையலாம். இவ்விரு முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து மற்றும் ரயில் சேவை தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுகின்றது.

எளிதாகவும் சிக்கனமானவும் கிடைக்கக்கூடிய அரசாங்க போக்குவரத்தின் காரணமாக ஸ்ரீபெருபுதூருக்குள் பயணம் செய்வதும் சௌகரியமாக இருக்கின்றது.

ஸ்ரீபெரும்புதூரின் வானிலை

ஸ்ரீபெரும்புதூர் பெரும்பாலும் வெப்பமான வானிலையையே பெற்று இருக்கிறது. கோடை வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் பெற்று இருக்கும்.

ஆண்டின் இந்த பகுதி பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம் நிலவுகின்றது. வெப்பம் அந்நேரத்தில் குறைந்தாலும், ஈரப்பதம் அதிகமாகவே இருக்கின்றது.

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்க்காலம் நிலவுகின்றது. அதுவே ஸ்ரீபெரும்புதூரின் சிறந்த காலம் ஆகும். தட்பவெப்பம் அதிக குளிர்ச்சி அடையாமல், பயணம் அனுபவம் இனிமையாக இருக்க உதவுகின்றது.

ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு

ஸ்ரீபெரும்புதூர் வானிலை

சிறந்த காலநிலை ஸ்ரீபெரும்புதூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஸ்ரீபெரும்புதூர்

  • சாலை வழியாக
    சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அமைந்து இருக்கிறது. எனவே சாலை வழியாக பயணம் செய்வது மிக எளிது. அரசாங்க பேருந்து கட்டணம் இருபது ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கப்பெறுகின்றது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பேருந்துகளும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்கின்றன. பயணத்திற்காக இருசக்கர வாகனங்களையும் வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். பயண நேரம் ஏறத்தாழ ஒரு மணி நேரம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஸ்ரீபெரும்புதூருக்கு அருகாமையில் திருவள்ளூர் ரயில் நிலையம் இருக்கின்ற போதும் பெரிய ரயில் நிலையம் சென்னை ரயில் நிலையமே. சென்னையில் இருந்து எளிதாக பேருந்துகளும், சொகுசு வாகனங்களும் கிடைக்கப்பெறுகின்றன. சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் பயணம் மிகவும் சுருக்கமானதும், சிக்கனமானதும் ஆகும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சென்னையில் இருந்து பயணம் செய்வதே ஸ்ரீபெரும்புதூரை அடைய சிறந்த வழி. இந்த நகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் சென்னை சர்வதேச விமானநிலையம் இருக்கின்றது. சென்னை விமானநிலையத்தில் இருந்து சொகுசு வாகனங்களை எளிதாக வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஒரு முறை பயணம் செய்ய சொகுசு வாகன கட்டணம் ரூ.500. பயண நேரம் ஏறத்தாழ ஒரு மணி நேரம். ஸ்ரீபெரும்புதூர் நகரில் நான்கு விமான தடங்கள் அமைக்க திட்டங்கள் ஏற்படுத்தபப்ட்டு இருக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed