Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீபெரும்புதூர் » வானிலை

ஸ்ரீபெரும்புதூர் வானிலை

அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஸ்ரீபெரும்புதூர்க்கு செல்ல சிறந்த காலகட்டம் ஆகும். இக்காலத்தில் வெப்பம் குறைவாகவும், இனிமையானதாகவும் இருக்கின்றது. மழைப்பொழிவு வெப்பத்தை குறைத்து, மக்களின் வரவேற்பை பெறுகின்றது. ஆண்டின் இந்த பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளும் இனிமையானதாக இருக்கின்றது. 

கோடைகாலம்

சென்னை வானிலையை போலவே ஸ்ரீபெரும்புதூரிலும் நிலவுகின்றது. மார்ச் முதல் மே மாதம் வரை கோடை வெயில் சுட்டெரிப்பதோடு, ஈரப்பதமும் அதிகமாக இருக்கிறது. மே மாதமே அதிக உஷ்ணமானது. கோடையில் தட்பவெப்பம் 32 டிகிரி செல்சியசில் இருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகின்றது. இந்த மாதங்களில் பயணம் செய்வது முற்றிலும் அசௌகரியமாக இருக்கும்.

மழைக்காலம்

ஸ்ரீபெரும்புதூரில் மழைக்காலம் குறுகிய நாட்களுக்கே நீடிக்கிறது. அக்டோபர் முதல் நவம்பர் வரை மழைக்காலம் நிலவுகின்றது. இந்த மாதங்களில் தட்பவெப்பம் குறைவாக இருந்தாலும், ஈரப்பதம் அதிகமாகவே இருக்கின்றது. ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களிலும் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் நிலவுகின்றது. ஸ்ரீபெரும்புதூருக்கு பயணம் செய்ய இதுவே சிறந்த காலம். குளிர்காலத்திலும் குறைவான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். தட்பவெப்பம் 25 டிகிரி செல்சியசில் இருந்து 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.